mazhaye mazhaye

மழையே, மழையே

மகிழ்ச்சியையும் மழையையும் கொண்டு வரும் மேகத்தோடு சேர்ந்து சுற்றுங்கள்

- Gopi Mavadiraja

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வானத்தில் மேகம் சந்தோஷமாக சுற்றிக் கொண்டு இருந்தது

"ஏன் நீ மழை பெய்யக்கூடாது? உனக்காக நான் நடனம் ஆடுகிறேன்" என்றது மயில்

"தயவுசெய்து மழை பெய். எனக்கு அதிக தண்ணீர் வேண்டும்" என்றது மீன்

"தயவுசெய்து மழை பெய். அடுத்த பயிருக்கு நான் விதை தூவ வேண்டும்" என்றார் விவசாயி

"நீ மழை பெய்தால், நான் காகித கப்பல் விடுவேன்" என்றான் ராஜூ

மினுமினுக்கும் துளிகளாக மேகம் மழை பொழிய ஆரம்பித்தது

மயில் தனது அழகான தோகையை விரித்து நடனம் ஆடியது

குளம் நிரம்பியது. மீன்கள் மகிழ்ச்சி அடைந்தன.

விவசாயி விதைகளை நட ஆரம்பித்தார்

குட்டைகளில் நிரம்பிய நீரில் துள்ளி குதித்து ராஜூவும் அவனது நண்பர்களும் சந்தோஷமாக நேரத்தை கழித்தனர்

அனைவரது மனதிலும் சந்தோஷத்தை நிரப்பியது மேகம். அது நகர்ந்து செல்ல செல்ல, எல்லா குழந்தைகளும் கையசைத்து பிரியாவிடை கொடுத்தனர்