miyaav miyaav vettai

மியாவ் மியாவ் வேட்டை

பலசாலியான குட்டி வேட்டைக்காரப் பூனை ஒண்ணு வேட்டைக்குப் புறப்பட்டுப் போகுது. அப்போது வழி தவறிப்போன அந்த குட்டி வேட்டைக்காரப் பூனை, எப்படி தன் வீட்டை அடைந்தது?

- Veronica Angel

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வேட்டையாடுவேன் நானுங்க என்னைப் போல பலசாலி யாருங்க?

இலையோ தழையோ அசைந்தா ஒரே பிடி பிடிப்பேங்க.

காலையில கூட வேட்டையாடினேன். காய்ந்து போன பெரிய இலை உஷ்ஷ் உஷ்ஷ் ஓசையோட தரையிறங்கியது மெல்ல மெல்ல.

படபடத்த இலை பறக்கத்தானே பார்த்துச்சு. நானோ ஓடித் துரத்தி தாவிப் பிடிச்சுதாடையால ஒரு இடி இடிச்சேன், பாதத்தால அடிச்சு நொறுக்கினேன்.

இலையோட கதைய முடிச்சுட்டேன்.

கரிச்

முறிச்

டொம் டொம்

கரிச் முறிச்

மொத்த கதையும் முடிச்சுட்டேன்!

என் குட்டி வேட்டைக்கார நண்பர்களைசத்தம் போட்டுக் கூப்பிட்டேன். சுத்திமுத்தி யாரையும் கண்ணுலயே காணல, நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியல.

இருந்தாலும் நான் பயப்படல ஏன்னா நான் பலசாலி தெரியும்ல! என்னதான் நடக்குதுன்னு பார்க்க ஒளிஞ்சு இருக்கேன் வேட்டையாட.

மியாவ் மியாவ், மியாவ் மியாவ். கூட்டுக்காரப் பூனைங்க பதில் மியாவ் சொல்லல, ஏதோ எனக்கு சரியாப் படல.

ரொம்ப நேரம் கழிச்சுத்தான் யாரோ பதில் சொல்லவும் கதவு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டேன். கரகரன்னு ஒரு குரல் மியாவுன்னு சொன்னது, தடபுடலா காலடி என்னை நோக்கி வந்தது.

பெரிய பூனை சொன்னது, கண்ணு முன்ன நிக்குது. அய்யய்யோ, மனித பூதம்! துள்ளிக் குதிச்சு ஓடியும் பூதம் பெரிய கைய நீட்ட, அய்யய்யோ மாட்டிக்கிட்டேன்.

சத்தம் போட்டுக் கத்தினேன், கத்திக் கத்திக் கதறினேன். நகமும் பல்லும் என் ஆயுதம் பூதத்தைக் கொல்லத் துடிச்சேன்.

பெரிய பூனை போலவே கழுத்தைப் பிடிச்சு தூக்குச்சு. நானும் பூதமும் இப்போ எதிரெதிரே அதோட மூக்கு கீழ மீசை போலத் தெரியுது.

பூதத்தோட வாசம் எனக்குப் பிடிக்கல அதோட பிடியில இருக்கவே முடியல. உரத்த குரலில் கத்தினேன் உச்சா அடிச்சு நனைச்சேன்.

அரண்டு போன பூதம் என்னை, பலகை மேல இறக்குச்சு. திரும்பிப் பார்த்து முறைச்சுகிட்டே நறுக்குன்னு கடிச்சிட்டேன்.

பூதம் காலை விடாம பலமா பிடிச்சுக் கடிச்சேன். பூதம் வலியில் கத்தவும் எனக்கு சிரிப்பா வந்துச்சு.

ஓடி தப்பிக்கத்தான் பார்த்தேன் அட திரும்பவும் நான் மாட்டிக்கிட்டேன். சந்துல பொந்துல நுழைஞ்சு நுழைஞ்சு எங்கயோ என்னைத் தூக்கிட்டுப் போச்சு.

ஒருவழியா பெரிய மரத்துக்குக் கீழே பூதம் என்னை இறக்கிவிட்டுச்சு. சுத்திச் சுத்திப் பார்த்தேன் நான், ஹைய்யா என் இடம் வந்துருச்சு!

எனக்கு குதூகலமோ குதூகலம் மியாவ் மியாவ்னு கத்தினேன். சந்து சந்தா தூக்கிப் போன பூதத்தைக் கடிக்க மறந்துட்டேன்.

என் மரத்தடிக்கு ஓடிப்போய் மியாவ் மியாவ்னு கூப்பிட்டேன். என் கூட்டுக்கார பூனைங்க, எல்லாரும் வந்தாங்க என் கதையை எல்லாம் கேட்டாங்க.

வேட்டையாடுவேன் பாருங்க என்னைப்போல பலசாலி யாருங்க? இன்னிக்கு இலையின் கதையை முடிச்சேன், பூதத்தோட சண்டை போட்டேன்.

இன்னும் நிறைய வேட்டையாட நாளைக்காகக் காத்திருக்கேன்!