mookkukulle puthaiyal paarunga

மூக்குக்குள்ளே புதையல் பாருங்க

நமது விரல்கள் ஏன் தானாக அடிக்கடி மூக்கை நோக்கிச் செல்கின்றன? மூக்குக்குள் விரலை விட்டு நோண்டுவது ஏன் சுகமாக இருக்கிறது? வாருங்கள், விரல்களுக்கும் மூக்குக்கும் இடையில் அப்படி என்னதான் நடக்கிறது என இந்த ஜாலியான கவிதையில் பார்க்கலாம்.

- Irulneeki Ganesan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குகைகள் இரண்டு இருக்குதுங்க

காற்றை இழுத்து விடுதுங்க

புதையல் அதிலே இருக்குதுங்க

தேடி அதைக் கண்டுபிடிங்க

விரலைக் குகையில் நுழைக்கணும்

அங்கும் இங்கும் சுழற்றணும்

வலதும் இடதும் நோண்டணும்

கொஞ்சம் கிச்சுக்கிச்சு மூட்டணும்

புதையலை அங்கிருந்து நகர்த்தணும்

நகத்தால் கோட்டையை தகர்க்கணும்

ஈரப் புதையலை காயவிடணும்

பின்னர் பூந்திபோல உருட்டணும்

உருட்டினதைத் தூர எறிங்க

அச்சமோ வெட்கமோ வேண்டாங்க

குழந்தைங்க கிழவங்க

பெண்கள்

எல்லாருமே நோண்டுவாங்க

மூக்கு உங்களதுதானுங்க

அறுக்காதீங்க அறுக்க விடாதீங்க

மறந்தும் புதையலத் திறக்காதீங்க

யாருக்கும் அதனைக் காட்டாதீங்க

அவசரம் ஆபத்து என்று வந்தா

எங்கேயாவது தடவிட்டு ஓடிடுங்க!