அம்மாவின் சப்பாத்தி.என் பெயர் காவியா.நாங்கள் கோதுமையை நடப்போகிறோம். என் அம்மாவோடு இணைந்து நான் அறிந்து கொள்ளப் போகிறேன்.
அம்மா நிலத்தில் முதலில் கோதுமை விதையை நட்டு வளர்த்து வந்தாள்.பச்சை பச்சைபசெலென தோட்டம் ? எப்போது வளரும் என காவியா ஆர்வமாக இருந்தாள்.
வளர்ந்து வந்த கோதுமையைப் பார்த்தவுடன்,அம்மா இது தான் கோதுமையா!நீளமாக குச்சியில் ஓரத்தில் இருக்கிறதே!இப்போதே உண்ணவேண்டும் என்று தோன்றுகிறதே!
விளைந்த கோதுமையை காய வைத்து மாவாக அரைத்தபின்,
ஆஹாஆஹா! அம்மா அரைத்த மாவைப் பிசைந்து சப்பாத்தியை சமைக்க துவங்கிவிட்டாள்.என்ன வாசனை ?ம்ம்ம்ம்ம்ம்ம் ........
காவியாவும் மிருதுவாக இருக்கும் சப்பாத்தி மாவைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தாள்.
சுவையான சப்பாத்தி ரெடி! முதல் சப்பாத்தி காவியாவிற்குத்தான். சாப்பிட ஆவலாக உள்ளதே! நன்றி அம்மா.
ப்ப்ப்ப்ப்ப்பாபா அருமையான சப்பாத்தி, என் அம்மாவின் சப்பாத்தி என சொல்லிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்.