naan padikka virubugiren

நான் படிக்க விரும்புகிறேன்

ஒரு பையன் யாராவது ஒருவருக்கு ஒரு புத்தகத்தை படிக்க வேண்டுகிறான். ஆனால், எல்லாரும் ரொம்ப வேலையாக இருக்கின்றனர்.

- venkataraman Ramasubramanian

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் படிக்க விரும்புகிறேன்.

யாருக்கு நான் படிக்க முடியும்?

என் தங்கை தூங்குகிறாள்.

யாருக்கு நான் படிக்க முடியும்?

என் அம்மாவும் பாட்டியும் வேலையாக இருக்கின்றனர்.

யாருக்கு நான் படிக்க முடியும்?

என் அப்பாவும் தாத்தாவும் வேலையாக இருக்கின்றனர்.

யாருக்கு நான் படிக்க முடியும்? எனக்கே நான் படிக்க முடியும்!