நான் வளர்ந்ததும் எனக்கென்று ஒரு வீடு இருக்கும். புத்தகங்கள், அதன் சுவர்களில் ஏறும். தரையில் படுத்திருக்கும். மெத்தையில் புரளும். அவை, அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். தேவைப்பட்டால்...
நான் தூங்குவேன்…
நான் புத்தககங்களைச் சுற்றி சுருண்டு கிடப்பேன்.
இப்படி
அப்படி
இது போன்று
அது போன்று
இப்படியும்
அப்படியும்
இது மாதிரி
அது மாதிரி
என் வீட்டில் மார்க்கர் பேனாக்கள் இருக்கும். மினுமினு பேனாக்கள் இருக்கும். வண்ணக் கலவைகளும் தூரிகைகளும் இருக்கும். பெரிய நிப் மைபேனாக்களும் பல்வகை கூர் பென்சில்களும் இருக்கும். தடியாக எழுத தடியான கூர் பென்சில், மெலிதாக எழுத ஒல்லியான கூர் பென்சில், இரண்டுக்கும் இடைப்பட்ட கூர் பென்சில்களும் கொட்டிக் கிடக்கும்.
அதுமட்டுமா? எண்ணெய் வண்ணங்கள், நீர் வண்ணங்கள், தடி தடியான புத்தகங்கள் எல்லாம் இருக்கும். “சரியாகக் கோடுகளுக்குள் மட்டும் வண்ணம் பூசு” என்றோ, “இந்த வண்ணத்தில் சூரியன் உதிக்காது” என்றோ நீங்கள் சொன்னால், என் பாதுகாவலர் லோதர் உங்களை அன்போடு அழைத்துச் சென்று வெளியே போகும் வழியைக் காண்பிப்பார்.
என் வீட்டில், சாக்கு நிறைய பொம்மை சட்டங்கள் இருக்கும். லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான துண்டுச் சட்டங்கள்.
எனக்காக அல்ல! எனக்கு சட்டங்களைப் பிடிக்காது.
ஆனால் அதைத்தவிர வீட்டில் உள்ள மற்ற எல்லாவற்றையும் எனக்குப் பிடிக்கும். அவற்றை யாரோடும் பகிரமாட்டேன். எனவே நீங்கள் அந்தச் சட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பியதைக் கட்டிக்கொள்ளலாம்.
தயவுசெய்து
நன்றி
மன்னிக்க
என் வீட்டுக் கடிகாரங்களை நானே சுழற்றுவேன். விடுமுறை நாட்களிலும், காலை நேரத்திலும் மெதுவாக ஓட வைப்பேன். மெதுவாக, மிக மெதுவாக! என் கண்களில் மிச்சசொச்சம் இருக்கும் தூக்கத்தையும் தூங்கி முடிக்க வசதியாக.
தூங்கி எழுந்ததும் மூக்கில் இருக்கும் அழுக்கை நோண்டி எடுப்பேன். அதை பச்சை மஞ்சள் வண்ண உருண்டையாக உருட்டுவேன். உருட்டியதை தலகாணிக்கடியில் வைத்துவிடுவேன். அது என்...
உலக பிரசித்திபெற்ற, இதுவரை வெளிவராத, திரும்பப் பெறமுடியாத, வியக்கத்தக்க அழுக்கு சேகரிப்பில் இடம்பெறும். (இந்தியாவின் பெருமை)
ஆம், நான் அழுக்குப் பந்துகளை சேகரிக்கப் போகிறேன். அது என் வீடு, உங்கள் வீடு அல்ல. நீங்கள் விரும்புவதை நீங்கள் சேகரியுங்கள். நான் விரும்புவதை நான் சேகரித்துக் கொள்கிறேன்!
சரிதானே?
வானில் பறக்க, சிறகுகள் இருக்கும் என் வீட்டில்.
வானிலை அமைந்திடும் என் விருப்பத்தில்.
அழகான தோல் சேணம் வைத்திருப்பேன். பசுவும் குதிரையும் ஒன்றாக வளர்ப்பேன்.
எந்நாளும் என் வீட்டில், கவிதை பாடும் இனிய மெட்டில்.
என் ரோஜா நிற பாண்டாவுடன் வராண்டாவில் உட்காருவேன்.
நானும் சிகப்பு பப்பியும் ஒரே கோப்பையில் தண்ணீர் குடிப்போம்.
என் பழுப்புநிறக் கரடியுடன் சாய்வுநாற்காலியில் ஆடுவேன்.
யாராவது “உள்ளே போ” என்றால் நான் வெளியே போவேன்!
என் வீட்டில் உட்புறம் வெளிப்புறமாகவும் வெளிப்புறம் உட்புறமாகவும் இருக்கும்.
என் வீட்டில் எனக்கென்று ஒரு அறை இருக்கும் அதில் சாவு வாத்தியம் கேட்கும்.
யாருமே சாகாதபோது சாவு வாத்தியம் வேடிக்கையானது. நிஜமாகத்தான் சொல்கிறேன்!
பூபூஊஊம் – போஓஓம்- போம்
அச்சுறுத்தும் அறையொன்றும் என் வீட்டில் இருக்கும், அது காலி அறையாக இருக்கும், அது சோகமான அறையாக இருக்கும்,அது இருண்ட அறையாக இருக்கும்.
நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். கல்லறையிலும் உறங்க வேண்டும்.
தலையணைக்கடியில் நீங்கள் கை வைத்தால்...
ஊஊஊ.
ஓஓஓஒ.
ஓஓஓஓ.
நான் பெரிதாக வளரும்போது, நான் பெரிதாக வளரும்போது, ஓ! இன்னும் நீண்ட காலம் உள்ளதே நான் பெரிதாக வளர்வதற்கு!
எனக்கு அந்த வீடு வேண்டும்...
இப்பொழுதே!