naaykuttikku keta sattham

நாய்க்குட்டிக்கு கேட்ட சத்தம்

குட்டி நாய்க்கு ஏதோ ஒரு இரைச்சல் சத்தம் இரவில் கேட்டு திடுக்கிட்டது. நாய்க்கு அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தேடிக் கண்டு பிடித்ததா?

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நாய்க்குட்டி  தூங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது அது தூக்கத்தில் இருந்து எழுந்தது!

சீப் சீப் சீப்...

கிறீச்  கிறீச் கிறீச் ...

சீப் கிறீச் சீப் கிறீச் ....

"எங்கிருந்து இந்த சத்தம் வருகிறது?" என்று கேட்டது நாய்க்குட்டி.

"*குட்டி யானை, குட்டி யானை, நீங்கள் மிகவும் உரக்க கூச்சல் போடுகிறீர்கள்!" என்றது நாய்க்குட்டி.

"அது நான் இல்லை. நான் கூச்சல் போடுவதில்லை," என்று பதில் அளித்தது குட்டி யானை.  *குட்டி யானை-Baby Elephant

"*முள்ளம்பன்றி,  முள்ளம்பன்றி,  நீங்கள் மிகவும் உரக்க கூச்சல் போடுகிறீர்கள்!" என்றது நாய்க்குட்டி.

"அது நான் இல்லை. என்னால் கூச்சல் போட முடியாது," என்று பதில் அளித்தது முள்ளம்பன்றி.

*முள்ளம்பன்றி - Porcupine

"*மரங்கொத்தி, மரங்கொத்தி,  நீங்கள் மிகவும் உரக்க கூச்சல் போடுகிறீர்கள்!" என்றது நாய்க்குட்டி.

"அது நான் இல்லை. என்னால் கூச்சல் போட முடியாது," என்று பதில் அளித்தது  மரங்கொத்தி.  *மரங்கொத்தி - Woodpecker

"*இருவாய்க் குருவி, இருவாய்க் குருவி,  நீங்கள் அனைவரும் மிகவும் உரக்க கூச்சல் போடுகிறீர்கள்!" என்றது நாய்க்குட்டி.

"அது நாங்கள் இல்லை. எங்களால் கூச்சல் போட முடியாது," என்று பதில் அளித்தது இருவாய்க் குருவிகள்.  *இருவாய்க் குருவி - Horn Bill

" *ஓசனிச்சிட்டுகள்,  ஓசனிச்சிட்டுகள்,  நீங்கள் அனைவரும் மிகவும் உரக்க கூச்சல் போடுகிறீர்கள்!" என்றது நாய்க்குட்டி.

"அது நாங்கள் இல்லை. எங்களால் கூச்சல் போட முடியாது," என்று பதில் அளித்தது  ஓசனிச்சிட்டுகள்.  *ஓசனிச்சிட்டுகள்-Humming Birds

"*குட்டி குரங்கு, குட்டி குரங்கு,  நீங்கள் அனைவரும் மிகவும் உரக்க கூச்சல் போடுகிறீர்கள்!" என்றது நாய்க்குட்டி.

"அது நாங்கள் இல்லை. யார் சத்தம் போடுவது? நாம் கண்டுபிடிக்கலாம்!" என்று பதில் அளித்தது குட்டி குரங்குகள்.  * குட்டி குரங்கு-Baby Monkey

"நாங்கள் *சிள்வண்டுகள்,  நாங்கள் சிள்வண்டுகள், நாங்கள் சீப் -  கிறீச்சிடுவோம்!

நாங்கள் எங்கள் இறக்கைகளை ஒன்றாக உரசி  இரவில் சீப் - கிறீச்சொலி சத்தம் போடுவோம்."  *சிள்வண்டுகள் - Crickets

"ஓ! அவை சிள்வண்டுகள்!"