கல் நத்தைக்கு அவசரம்.
“என் குடும்பத்தாரிடம் வேகமாகப் போகவேண்டும்...”
நத்தையுடன் தவளை வேகமாகத் தாவியது.
“ம்... இது யார் எங்களை
முந்திக்கொண்டு?”
“ம்... எலியாரே இன்னும் கொஞ்சம் வேகமாக போங்கள்”
‘இவருடைய வேகம் நன்றாக இருக்கின்றதே...’
நத்தைக்கு முயல்
உதவியது.
முயலை முந்திக்கொண்டு இன்னும் ஒரு பிராணி வேகமாக...
இப்போது எருமைக்கன்று நத்தைக்கு உதவியது.
‘இதோ...
இன்னும் ஒரு நண்பர்
மிகவும் வேகமாக..!’
‘இவரது வேகந்தான்
சரியான வேகம்...’
“போய் வா நத்தை...”
இப்போது நத்தை பொருத்தமான
வேகத்திற்கு மாறியிருந்தது.
“பயணத்தை விரைவாக முடிக்க உதவியமைக்கு நன்றி நண்பா...”