இதுதான் பியாங் ஆறு.
பியாங் ஆற்றின் அக்கரையில் இருக்கும் மலையின் பெயர் தியாங்.
டீனாவும், தினாவும் தியாங் மலையில் வசித்து வந்தனர்.
டீனாவும் தினாவும் ஒரே வகுப்பில் படிக்கும் தோழிகள்.
ஒரு நாள் டீனாவும், தினாவும் காட்டுப் பகுதியில் நடந்து சென்றார்கள்.
அப்போது ஒரு அழகான சிறு ஓடையைக் கடந்து சென்றார்கள்.
திடீரென்று அங்கு ஒரு அழகான நீல தேவதை தோன்றினாள்!
டீனாவும் தினாவும் இந்த எதிர்பாராத பரிசால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேவதை அவர்களிடம் மலர்களைப் பறித்துத் தரச் சொன்னாள்.
அவர்களும் காட்டிலிருந்து வெண்மையான மல்லிகைப் பூக்களையும், சிவப்பு நிற செம்பருத்திகளையும் பறித்துத் தந்தனர்.
தேவதை மகிழ்ச்சியுடன் மலர்களைப் பெற்றுக் கொண்டாள்.
அவர்கள் கைகளைப் பற்றிக் கொண்டாள் தேவதை.
பின்பு அவர்கள் அனைவரும் நடனம் ஆடத் துவங்கினர்.
நீல தேவதை அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொள்ளும் நேரம் வந்தது.
டீனாவும் தினாவும் தேவதைக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.
நீல தேவதை அவர்கள் பறித்துத் தந்த மலர்களை எடுத்துக் கொண்டு தொலை தூரத்திற்கு அப்பால் பறந்தாள் .