அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய்யேஏஏஏஏஏஏஏஏ
கரப்பான் பூச்சியைப் பார்த்தால் பயந்து ஓடிவிடுவீர்களா?
தேனீயைக் கண்டால் அலறுவீர்களா?
அதற்குப் பதிலாக அவற்றை சற்றே உற்றுப் பாருங்கள்.
பூச்சிகள் அற்புதமானவை. அவை விஞ்ஞானிகளுக்கு இயந்திரங்களை உருவாக்க உதவுகின்றன.
வெட்டுக்கிளி இயந்திரங்கள் மிகவும் குட்டியானவை. ஆனால், அவை மிக உயரமாகத் தாவும். உண்மையான வெட்டுக்கிளிகளைப் போலவே.
அவை ஒருநாள் யாரும் சென்றிராத இடங்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்யலாம்.
காப்பாத்துங்ங்ங்க!!
ரோச்பாட் என்னும் கரப்பான் இயந்திரங்களால் எல்லா திசைகளிலும் ஓட முடியும். அவை சிறு வெடிப்புகளுக்குள்ளும் நுழையும். உண்மையான கரப்பான் பூச்சிகளைப் போலவே.
அவை ஒருநாள், காணாமல் போனவர்களையோ அல்லது எங்கேனும் சிக்கிக் கொண்டவர்களையோ கண்டுபிடிக்க உதவலாம்.
இயந்திர தேனீக்களால் பறந்து சென்று செடிகளின் மேல் உட்கார இயலும். உண்மையான தேனீக்களைப் போலவே.
அவை ஒரு நாள், விண்வெளிக் கப்பலில் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று மண்ணையும் வாயுக்களையும் சேகரித்துக் கொண்டுவந்து நமக்குத் தரலாம்.
ப்ஸ்ஸ்ஸ் ப்ஸ்ஸ்ஸ் ப்ஸ்ஸ் ப்ஸ்ஸ்ஸ் ப்ஸ்ஸ்ஸ் ப்ஸ்ஸ்
தண்ணீர்ப் பூச்சி நுண்இயந்திரங்களால் தண்ணீரின் மேல் நடக்க இயலும். உண்மையான தண்ணீர்ப் பூச்சிகளைப் போலவே.
அவை ஒரு நாள், நம்முடைய ஏரிகளையும் கடல்களையும்கூட சுத்தம் செய்யலாம்.
அதனால், அடுத்த முறை உங்களைச் சுற்றி ஏதாவது ஊர்ந்து சென்றாலோ ரீங்காரமிட்டாலோ கவனமாகப் பாருங்கள். அது கரப்பான் இயந்திரமாகவோ அல்லது இயந்திர தேனீயாகவோ இருக்கலாம்!
யாருக்குத் தெரியும்!
பாட்(Bot) என்பது சிறிய செயல்களைத் திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய கணினி நிரல் அல்லது குட்டி இயந்திரம் ஆகும்.
ரோச்பாட்கள்
வெட்டுக்கிளி இயந்திரங்கள்
இயந்திரத் தேனீக்கள்
தண்ணீர்ப் பூச்சி நுண்இயந்திரங்கள்