niccumaniyum vattukkuncum

நிச்சுமணியும் வாத்துக்குஞ்சும்

நிச்சுமணியின் புதிய நண்பர் வாத்துக் குஞ்சு. வாத்துக் குஞ்சை அழைத்துச் செல்ல ஒருவர் வருகின்றார். அவரோடு வாத்துக் குஞ்சு சென்றிருக்குமா?

- Egambaram Kumudini

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“ஏன் பிச்சு அழுது கொண்டிருக்கின்றாய்” நிச்சுமணி இரக்கப்பட்டாள்.

நிச்சுமணி பிச்சுவுக்கு முதலுதவி செய்து உபசரித்தாள்.

“இன்று நல்ல வேட்டைதான்...” கிட்டி பிச்சுவை நெருங்கியது.

“...ஏ... ய்... நில்... நில்...” என்றபடி நிச்சுமணி முந்திக் கொண்டாள்.

நண்பர்களுக்குக் கவலையாக இருந்தது. பிச்சுவை வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றார்கள்.

“வாருங்கள் விளையாடுவோம்...” பிச்சு குணமானதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்போது அங்கே பிச்சுவைத் தேடி...

பிச்சு தன் தாயைச் சந்தித்தது.

பிச்சு தன் தாயோடு புறப்பட்டது

நிச்சுமணியும் நண்பர்களும் பிச்சுவை அனுப்பி வைத்தார்கள்.