நாங்கள் எல்லோரும் தசரா திருவிழா கண்காட்சிக்குச் சென்றோம்.
அப்பா சிண்டுவுக்கு ஒரு அழகான கண்ணாடி வாங்கிக் கொடுத்தார். அம்மா எனக்கு ஒரு நீல நிறத் தொப்பி வாங்கிக்
கொடுத்தார். சின்னப் பாப்பாவுக்கு இனிப்பு மிட்டாய் கிடைத்தது.
திரும்பி வீட்டுக்குப் போகும் வழியில் பலமாக காற்று வீசியது. அதில் என் தொப்பி பறந்துபோனது.
ஒரு பழைய அரசமரத்தின் கிளையில் போய் என் தொப்பி மாட்டிக்கொண்டது.
நான் ’ஓ’வென்று அழுதேன். இரவு உணவையும் நான் சாப்பிடவில்லை.
இரவு வானில் நிலவு தவழ்ந்து வந்தது.
அது அரசமரத்தில் இருந்த என் தொப்பியைப் பார்த்தது.
அது என் தொப்பியை அணிந்து பார்த்தது. மகிழ்ச்சியோடு சிரித்தது. நானும் சிரித்தேன்.
அடுத்த நாள் பள்ளியிலிருந்து வந்ததும், என் அம்மா பளபளக்கும் புதிய சிவப்புத் தொப்பி ஒன்றைக்
கொடுத்தார். “நிலா அனுப்பியது” என்றும் சொன்னார்.
அன்றிரவு நானும் நிலவும் புன்னகை செய்தோம். அவரவர் தொப்பியை அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தோம்.
சூரியனுக்கும் ஒரு தொப்பி வேண்டுமா? என்ன சொல்கிறீர்கள்?
நான் இன்று எந்தத் தொப்பி அணிந்துள்ளேன் என்று சொல்லுங்கள், பார்க்கலாம்!