பப்புக்குட்டி பண்ணைக்கு வரத் தாமதமாகிவிட்டது.
எல்லாப் பிராணிகளுக்கும் சரியான பசி...
பன்றியின் தலைமையில் கூடிக் கதைத்தன.
“வாருங்கள், பண்ணைவீட்டைத் திறப்போம்...”
பன்றிக்குப் பின்னால் பிராணிகள் சென்றன.
போகும் வழியில் ஒரு குட்டை.
“என்ன அருமையான குட்டை...” பன்றி குட்டையில் இறங்கிவிட்டது.
“இதோ... எனக்கும் ஓரிடம்” கோழி குப்பை மேட்டைக் கிளற ஆரம்பித்துவிட்டது.
“ம்... எனக்கானது கிடைத்துவிட்டது...
ம்பா...”
“மே... மே...”
பரணில் ஏறிய
ஆடு சறுக்கி விழுந்தது.
கூடையும் கவிழ்ந்தது.
“இங்கே என்ன நடக்கின்றது?” பப்புக்குட்டி வந்து விட்டார்.
“கடவுளே... என்ன இது?”அதிர்ச்சியில் சறுக்கி விழுந்தார் பப்பு.
பிராணிகள் எல்லாம் இருந்த கோலத்திலேயே ஓடி வந்தன.
பிராணிகளை எல்லாம் பிடித்து அடைத்தார்.
“எங்கே போனது
இந்த வாத்து?”
“ஆ... இதோ இருக்கின்றது...”