ooril katti pidithalgal

ஊரில் கட்டிப் பிடித்தல்கள்

இது ஜில்லி. இன்று, இவள் ஊரின் பெரும்பான்மையான பூனைகளைக் கட்டிப் பிடித்தாள்.

- venkataraman Ramasubramanian

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

என் பெயர் ஜில்லி.

இன்று, ஊரின் பெரும்பாலான

பூனைகளைக் கட்டிப் பிடித்தேன்.

பக்கத்து வீட்டுக்காரரின் பூனை

பென்னைக் கட்டிப் பிடித்தேன்.

மியாவ்?

பென் சொன்னான், "மியாவ்?"

பூங்காவின் பெஞ்சின் கீழே வாழும் பூனையைக்

கட்டிப் பிடித்தேன்.

அவன் வளைந்து

நெளிந்தான்.

திருமதி லில்லியின் இஞ்சி நிறமான

கொழு கொழு பூனையைக்

கட்டிப் பிடித்தேன்.

அவன் என் முகத்தை நக்கினான்.

"சப், சப், சப்"

சப்!

மீன் மற்றும் வறுவல்கள் கடைக்கு

வெளியே சாப்பிடும் பூனையைக்

கட்டிப் பிடித்தேன்.

அவன் "ஓம் நாம் நாம்." என்றான்.

கட்டிப் பிடித்தலைப் பிடிக்காத

சிடுசிடுக்கும் பூனையைக் கூட கட்டிப் பிடித்தேன்.

அவன் திரும்பத் திரும்ப ஓலமிட்டான்.

நான் ஒரு நீளமான பூனையைக்

கட்டிப் பிடித்தேன்.

நான் ஒரு குறுகிய பூனையைக்

கட்டிப் பிடித்தேன்.

நான் ஒரு வயதான பூனையைக்

கட்டிப் பிடித்தேன்.

நான் ஒரு இளம் பூனையைக்

கட்டிப் பிடித்தேன்.

நான் ஒரு அம்மா பூனையைக்

கட்டிப் பிடித்தேன்.

மேலும் அதன் ஒவ்வொரு குட்டிகளையும்.

நான் மிருகக்காட்சி சாலையிலுள்ள பெரிய பூனைகளை கட்டிப் பிடிக்க முயற்சி செய்தேன். ஆனால், மிருகக்காட்சி சாலை பராமரிப்பாளர்  சொன்னார்,

"கூடாது!"

நான் பேருந்தில் ஏறி வயதான பாட்டியின் பையில் ஒளிந்திருந்த பூனையைக் கட்டிப் பிடித்தேன்.

அந்த வயதான பாட்டி வீல்

எனக் கத்தினார்!

வீல்!

நான் வீட்டுக்கு வந்து, மெத்தையில் படுத்தேன்.

கொட்டாவி!

சில ரோமங்கள் நிறைந்தவைகள் உள்ளே நுழைந்தன...

...மேலும் என்னைக் கட்டிப் பிடித்தன.