டிக் டாக் டிக் டாக், பனுவாரி கடிகாரத்தை நோக்கினாள்.
மொட்டை மாடியில் இருந்து எட்டிப் பார்த்து நிதானம் இல்லாமல் நடந்தாள்.
அய்யோ! இந்த குல்பி மாமா எப்பொழுது வருவார்?
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று ஒரு சத்தம் கேட்டது. பனுவாரி அவள் சுருக்குப்பையை எடுத்துக்கொண்டு ஓடினாள்.
"இன்று எத்தனை குல்பி வேண்டும்?" என்று குல்பி மாமா பனுவாரியிடம் மெல்லிய குரலில் கேட்டார்.
"அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆளுக்கு ஒன்று. தம்பி பப்லூவுக்கு ஒன்று."
அவள் தன் விரல்களை வைத்து எண்ணினாள். வேகமாக எண்ணினாள்.
"இரண்டும் ஒன்றும் மூன்று.
மூன்றை ஐந்தால் பெருக்கினால் பதினைந்து."
பாட்டி, "எனக்கு இன்று குல்பி வேண்டாம்" என்று பொய் சொல்வாள் ஆனால் ராத்திரியில் திருடனைப்போல வந்து ஒரு குல்பியை ஆசையோடு சாப்பிடுவாள்.
"அப்போது மொத்தம் எத்தனை வேண்டும்?" என்று குல்பி மாமா கேட்டார்.
அவள் மீண்டும் யோசித்தாள்.
"மூன்றும் ஒன்றும் நான்கு. நாங்கை ஐந்தால் பெருக்கியால் இருபது!"
"அப்போது உனக்கு குல்பி வேண்டாமா?" என்று குல்பி மாமா சிரித்தார்.
"என்னை பற்றி மறந்துவிட்டேன்! எனக்கும் ஒரு குல்பி வேண்டும்! ஐந்து குல்பிகளுக்கு 25 ரூபாய். வாங்கிக்கொள்ளுங்கள்"
அப்போது வெயிலில் பறந்து கொண்டிருந்த ஒரு காகம் பனுவாரியின் குல்பியை பிடுங்கிக்கொண்டு பறந்து போயது.
என்னிடம் 25 ரூபாய் மட்டுமே இருந்தது என்று கூறி பனுவாரி உடைந்து போனாள்.
"இதை எடுத்துக்கொள், இலவசமாக ஒரு குல்பி." என்று குல்பி மாமா கூறினார்.
பனுவாரி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று மணி அடித்துக்கொண்டு குல்பி மாமா கிளம்பினார்.