வேதிகாவும் கரணும் தங்கள் தாத்தாவின் ஆடும் நாற்காலியில் ஒன்றாக சேர்ந்து படிக்க விரும்பினர். “சிங்கத்தைப் பாரு” என்று வேதிகா சுட்டிக்காட்டினாள்.“இது மிகச் சிறிய படம். தாத்தாவின் பெரிய பூதக்கண்ணாடியை கொண்டு வா,”என்றான் கரண்.
சிங்கம் மிகவும் பெரியதாக தெரியும் வரை கரண் பூதக்கண்ணாடியை முன்னும் பின்னுமாக நகர்த்தினான்.“வேதிகா! இந்த சிங்கம் மேலும் மேலும் பெரிதாகி வருகிறது!”“சிங்கம் நகர்கிறது, கரண்!” என்று கத்தினாள் வேதிகா.
அப்போதே, கரணும் வேதிகாவும் பார்த்துக்கொண்டிருந்த கண்ணாடியை கீழே போட்டுவிட, அவர்கள் முன்பு ஒரு பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்ததைக் பார்த்தார்கள்.
சிங்கம் அதன் அகன்ற வாயைத் திறந்து, “மியாவ்!” என்றது.
“என்ன தவறு சிங்கராஜா? ஏன் பூனை போல ஒலிக்கிறாய்?” என்று கேட்டாள் வேதிகா.
“என் உறவினர், பூனை மற்றும் நான் நேற்று ஏரியில் சந்தித்தோம், நாங்கள் ஏரியிலிருந்த தண்ணீரை குடித்தபோது, நான் அவளுடைய மியாவ் ஒளியை பெற்றேன், அவள் என் கர்ஜனையைப் பெற்றாள்” என்று சிங்கராஜா சொன்னது.
“இது பயங்கரமானது, சிங்கராஜா. உங்கள் உறவினர் பூனையை நாங்கள் எங்கே காண்பது?” என்று கேட்டான் கரண்.“ஏதோ ஒரு மரத்தில் உட்கார்ந்து பறவைகளை பயமுறுத்தும் என நான் நினைக்குறேன்” என்று சிங்கம் பதிலளித்தது.“வேதிகா, சிங்கம் தனது கர்ஜனையைத் திரும்பப் பெற உதவுவோம்” என்று கரண் கூறினான்.
“எங்களுடன் வாருங்கள் சிங்கராஜா,” என்றாள் வேதிகா. அப்போதே அவர்கள் தேடும் கர்ஜனை சத்தம் கேட்டது.தேடினர், தேடினர், ஒரு மரத்தின் மேல் பூனை உட்கார்ந்திருப்பதைக் கண்டுபிடிக்கும் வரை அவர்கள் தேடினர்.
“பூனையே, உனக்கு உரத்த கர்ஜனை ஒலி இருக்கிறது” என்றாள் வேதிகா.“ஆம், எனக்கு உள்ளது. மேலும், சிங்கத்திற்கு எனது சிறிய மியாவ் ஒலி உள்ளது,” என்று பூனை பதிலளித்தது. “இப்போது என்னால் அனைத்து பறவைகளையும் விலங்குகளையும் பயமுறுத்த முடியும்.”
“சிங்கராஜாவிற்கு தனது கர்ஜனை மீண்டும் தேவை. தயவுசெய்து அதை அவரிடம் திருப்பித் தரவும்” என்று கரண் கெஞ்சினான். அப்போது கரண் “ஆஆச்சூஹூ!” என்று தும்மினான். பின்னர், இன்னும் ஒன்று பின்தொடர்ந்தது, மற்றொன்று, பின்னர் பல.
“கரண் அதை நிறுத்து, என்னையும் அப்படி செய்ய விரும்புகிறாயா, ஆஆஆச்சூஹூ!” வேதிகா தும்மினாள். பின்னர், இன்னும் ஒன்று பின்தொடர்ந்தது, மற்றொன்று, பின்னர் பல.
யாரும் எதையும் சொல்வதற்கு முன்பு, பூனையும் சிங்கமும் முனகின, வாயை அகலமாகத் திறந்து “ஆஆஆஆ” சத்தம் போட்டனர். ஒன்று மியாவ்வ்வ்வ்வ் போலவும், மற்றொன்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர் போலவும் ஒலித்தது. பின்னர், மேலும் ஒருவர் பின்தொடர்ந்தனர், மற்றொன்று பின்னர் பல.
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து முனகினார்கள். சிங்கம் மியாவ் என்று செய்ய முயன்றது, ஆனால் வெளியே கர்ர்ர்ர்! என்று சத்தம் வந்தது, பூனை கர்ஜிக்க முயன்றது, ஆனால் வெளியே மியாவ் என்று சத்தம் வந்தது! வேதிகா கைதட்டி சிரித்தாள். “சிங்கராஜா, உங்களுடைய கர்ஜனை சத்தம் உங்களிடம் உள்ளது.” “ஆமாம், ஆமாம் வந்துவிட்டது, நன்றி,” என்று அவர் பதிலளித்தார்.
பூனை மிகவும் மகிழ்ச்சியாகத் இருப்பதாக தெரியவில்லை. “பூனையே, உங்கள் மியாவ் சத்தம் உங்களுக்கு இனிமையாக இருக்கிறது" என்று கரண் கூறினான். “அப்படியா! நன்றி,” என்று பூனை கூறியது.
வேதிகாவும் கரணும் பூனையை ஒரு நெருக்கமான பார்வை பார்க்க தங்கள் பூதக்கண்ணாடி பிடித்துக் கொண்டு அதை முன்னும் பின்னும் நகர்த்தும்போது பூனை சிறிது சிறிதாக மாறியது.
அப்போதே கரணும் வேதிகாவும் தங்கள் தாத்தாவின் ஆடும் நாற்காலியில் முன்னும் பின்னுமாக ஆடுவதைக் உணர்ந்தார்கள்.