ஒரு நட்சத்திரத்தின் தோல்வி!
நா. பார்த்தசாரதி
அவள் 'ஜோக்' அடித்த போது எல்லாரும் சிரித்தார்கள். அவன் மட்டும் சிரிக்கவில்லை. 'செட்'டில் அவள் நடுநாயகமாக அரசி போல் வீற்றிருந்ததையே அவன் பொருட்படுத்தியதாகவோ, இலட்சியம் செய்ததாகவோ கூடத் தெரியவில்லை.