oru periya bayangara kurattai

ஒரு பெரிய, பயங்கர குறட்டை!

அண்ணன் ராஜு எல்லாக் கொழுக்கட்டைகளையும் முழுங்கி விடுகிறான். பதிலுக்கு ஒரு மர்மத்தை தன் தங்கை பிஞ்சூவிற்கு விட்டுச் செல்கிறான்! அவள் கண்டுப்பிடிப்பாளா? "அம்மா அம்மா கொழுக்கட்டைக்கு கண்ணும் உண்டோ டீ?" என்ற சிறுவர் பாடலின் வரிகளை ஒட்டி ஒரு நகைச்சுவை குடும்பக்கதை. இக்கதை சிங்கப்பூரின் தமிழ் மொழி மாதத்தைக் கொண்டாட ஏழுதப்பட்டது.

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவை

கொழுக்கட்டைகள்

தாத்தா

குறட்டை விடுகிறார்

"காற்றுப் போல் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி நகர வேண்டும்!"என ராஜு தனக்கு தானே அறிவுரை கூறினான்.

கடங்ங்ங்

"ராஜு! விருந்தாளிகளுக்குச் செய்த கொழுக்கட்டைகளைத் தொடாதே!" என அம்மா எச்சரித்தார்.

மடங்ங்ங்

"ஷ் ராஜு... ஒரு தந்திர எலி போல் வேலை செய்ய வேண்டும்! இந்த அனைத்து கொழுக்கட்டைகளையும் என் பெரும் வாய்க்குள் ஒரே நேரத்தில் அடக்கிக் கொள்வது தான் என் பிரம்மாண்ட சவால்! ஹாஹாஹா! ஆம்!

"ராஜு! ஒரு கொழுக்கட்டை கூட காணாமல் போனால்... பிஞ்சூ! அவன் சமயலறையில் இருக்கிறானா போய் பார்த்து வா!" என்று அம்மா கூவினார்.

பூபூபூ

ர்ர்ர்ர்ர்

ப்ப்ப்!!!!!

"அய்யய்யோ... பிஞ்சூ போட்டுக் கொடுத்துவிடுவாளே!" ராஜு சுற்றிப் பார்த்தான்.

மூலையில் ஏதோ குடைவதைக் கண்டான்...

"ஹை,

நான் தப்பிக்க

வழி கண்டு

விட்டேன்!

வந்து இந்த பாத்திரத்தில் உட்கார்!"

"அண்ணா?" என பிஞ்சூ அழைத்தாள்.

"ஜீ பூம் பா!

இந்த ராஜு மர்மமாக

மறைந்து

விடுவான் !"

என ராஜு

உருண்டு

திரண்டு

ஒளிய...

டமால்!

"ஆ! ஏய் குளிர்சாதனப் பெட்டி! தள்ளிப் போ!        என் வழியை மறைக்கிறாய்!"

ஹி ஹி...

இனி நல்ல வேடிக்கை காணலாம்!

1

3

4

2

"அண்ணா?

ஓ... மேசை மேல் என்ன?"

"அம்மா கொ... இல்லை... கு... குறட்டைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாரே... உள்ளே இருக்குமோ? பார்த்துவிடலாம்."

ஸ்க்வீ...

ஸ்க்வீ...

"ம்... மூடி இறுக்கமாய் உள்ளது..."

பிஸ்க்

பிஸ்க்

ஆ!!!

"அம்மா! குறட்டை என்னைப்பார்த்து

அதன் வாலை பிஸ்க்கு பிஸ்க்கு என்றது!"

"என்னது? யார் குறட்டை விட்டார்? தாத்தாவா?" என அம்மா கேட்டார்.

"கனவாக இருக்குமோ? மீண்டும் பார்க்கலாம்..."

கிச்சு!

கிச்சு!

கிச்சு!

"அம்மா! குறட்டை அதன்மூக்கை கிச்சு கிச்சு செய்கிறது!"

"தாத்தாவின் மூக்கை கிச்சு கிச்சு மூட்டாதே பிஞ்சூ! ஒரு முறை தும்ம ஆரம்பித்தால் தும்மிக்கொண்டே இருப்பார்! அவரின் அறையை கொஞ்சம் சுத்தம் செய்ய உதவு. எங்கு பார்த்தாலும் பசையும் தாட்களும்... பக்கத்து வீட்டு நிம்மி ஆண்ட்டிக்கு ராக்கெட் விடும் வயதா இது?" என அம்மா புலம்பினார்.

"அம்மா என்ன உளறுகிறார்? இன்னொரு முறை திறந்துப் பார்ப்போம்..."

டக்     டக்

ஈஈஈஈஈஈஈஈஈ

பக்

பக்

"என்ன

பெரிய

காதுகள்..."

"எவ்வளவு

நீளமான

பற்கள்!"

"குறட்டையே...

உன் கண்கள் கோலிகுண்டுகள் போல் உள்ளனவே!"

"அட..."

"நீ அந்த..."

"அம்மா!

அந்த பெரிய பயங்கர ஓநாய் நம் வீட்டிற்கு வந்துள்ளது!"

"தாத்தா  பிறகு கதை சொல்லலாம், பிஞ்சூ. பல் துவக்கினாரா? நேற்றே துவக்காமல் பழச்சாறு அருந்திக்கொண்டிருந்தார். இன்று நான் ஏமாறமாட்டேன்!" என்றார் அம்மா.

"ஹ்ம்... அம்மாவிற்கு தாத்தா மேல் ரொம்பத்தான் கவலை!"

"சோதிக்கிறேன் இந்த குறட்டையை!"

பிஞ்சூ மூடியைத் திறந்துப் பார்க்கையில்...

அம்மா!

குறட்டை டொய்ங் டொய்ங் என ஆடுகிறது!

"தாத்தாவிற்கு ஊன்றுக்கோல் எடுத்துக்கொடு! போன வாரம் நிம்மி ஆண்ட்டியின் நடன வகுப்பிற்குள் திருட்டுத்தனமாய் புகுந்து முதுகு பிடித்துக்கொண்டார்!" என்றார் அம்மா.

பிஞ்சூ காதில் வாங்கவில்லை.

டிக்!

டிக்!

கொழுக்கட்டை கத்தியது...

அம்மா!

"என்ன தான் பிரச்சனை பிஞ்சூ? நீ தாத்தாவுடன்

தானே இருந்தாய்?

ராஜு எங்கே?"

அம்மா பாருங்களேன்! இந்த பெரிய, பயங்கர குறட்டை என்னைப் பார்த்து ஸ்க்வீக் என்றது!

ஹி...

ஹி...

ஹி...

ஹா ஹா ஹா

ஹாஹா

ஹாஹாஹா!

"குட்டீஸ்... எழுந்ததுமே எனக்கு பயங்கர யோசனை. இந்த ராக்கெட்டை நாம நிம்மி..."

ஸ்க்க்வீவீவீக்

அய்யய்யோ.

ஹப்பா...

"இல்லை பிஞ்சூ.

அது வெறும் பெருச்சாளி தான்."

"இதோ.

இது

தான் பெரிய, பயங்கர குறட்டை!"