otraik kompu maadu

ஒற்றைக் கொம்பு மாடு

இப்படியொரு மாட்டை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

- கொ.மா.கோ. இளங்கோ

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எங்க வீட்டில்

ஓர் அழகான மாடு இருக்கிறது

பாருங்களேன்!

அதற்கு ஒற்றைக் கொம்பு மட்டுமே இருக்கிறது.

வாலே இல்லாத மாடு.

கொழுகொழுவென்று இருக்கும் அந்த மாட்டுக்கு

வயிறு பெரியது.

அது, மிகவும் பலசாலியான மாடு.

மாட்டைப் பாராமரிப்பவர்,

அதை அதிகம் நேசிக்கிறார்.

மற்ற மாடுகள் அடர்ந்த புல்வெளியில் கூட்டமாக மேயும்போது,

அது மட்டும் தனியாகவே இருக்கிறது.

இது சண்டைக்கார மாடு என்பதால்,

மற்ற மாடுகள்

அதைத் தனியாக விட்டுவிடுகின்றன.

அப்படியொரு மாட்டை நீங்கள் பார்த்திருந்தால்

என்ன செய்திருப்பீர்கள்

சொல்லுங்களேன்!

சொல்லுங்களேன்!