இது எங்கள் தோட்டம்
என் அப்பா வாழை மரம் மற்றும் முருங்கை மரம் நட்டார்.
என் அம்மா வெள்ளரி, பாகற்காய்,சுரைக்காய், , பச்சைப் பூக்கோசு
போன்ற பச்சை காய்கறிகளை வளர்த்து வருகிறார்.
என் தாத்தா பீன்ஸ்,அவரைக்காய் மற்றும் பிரண்டை போன்ற பந்தல் காய்கறிகள் நட்டார்.
என் பாட்டி கற்றாழை, துளசி மற்றும் கற்பூரவள்ளி போன்ற மூலிகைச் செடி வளர்க்கிறார்.
எனது அக்கா புதினா, கொத்தமல்லி இலை, லெட்யூஸ், கீரை, கறிவேப்பிலை போன்ற பச்சை இலைகளை வளர்த்து இருக்கிறாள்.
நான் வெந்தயம் விதை மற்றும் கொத்தமல்லி விதைகளை நட்டேன்.
என் தங்கை ரோஜா செடி, மல்லிகை பூ செடி வைத்திருக்கிறாள்.
நாம் ஒவ்வொருவரும் கொல்லைப்புறத்தில் அல்லது மொட்டை மாடியில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பச்சை இலைகள் வளர்க்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும்.