வணக்கம், வரிசையில் நான்காவதாக இருப்பது தான் நான். உங்களால் என்னை பார்க்க முடிகிறதா?
இடம், வலம், இடம், வலம். நாங்கள் அமைதியாக வரிசையில் செல்வோம்.
சட்டென்று எனக்கு ஒரு யோசனை வந்தது. நான் வேகமாக செல்வதற்கு ஒரு ஜோடி சக்கரங்களை பெறப்போகிறேன்.
மற்ற விலங்குகளைப் போல நாங்கள் கூச்சலிட மாட்டோம். வாசனை தான் எங்களது மொழியாகும்.
ஒரு வகையான வாசனை கூறுகிறது, "ஒரு விருந்துக்கு என்னை பின்தொடருங்கள்."
மற்றொரு வாசனை, "ஆபத்து! அங்கே போகாதே." என்றது.
எனக்கும் உங்களைப் போலவே கேக்குகளும், அனைத்து வகையான இனிப்புகளும் பிடிக்கும்.
என் பலத்தை பார்க்க வேண்டுமா?
நான் உனக்கு மிகவும் சிறியதாக தெரியலாம். ஆனால் நான் மிகவும் வலுவானவன்.
கதவுகள் மூடப்பட்டிருந்தாலும் கவலை இல்லை. சிறு விரிசல் போதும் நான் உள்ளே நுழைய.
நம்பினால் நம்புங்கள், நாங்கள் நூற்றுக்கணக்கில் இந்தக் காலனியில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்.