parakka virumbiya mayil

பறக்க விரும்பிய மயில்

மயில் சோகம் ஆக இருந்தது. அதற்கு மற்ற பறவைகள் போல பறக்க விரும்பியது. மயில் மற்ற இறக்கைகளைச் சேகரித்த போது என்ன நடந்தது?

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தௌசி மயில் மிகவும் அன்பான கனிவான பறவை.

அந்த மயில் மற்ற எல்லா பறவைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்தது.

ஆனால் தௌசிக்கு ஒரு கனவு இருந்தது.

கீழே இருந்து கொத்தி கொத்தித் தின்னுவதற்கு பதிலாக, அதற்கு தொலைதூர நிலங்களுக்கு பறக்க விரும்பியது.

அதற்கு இயற்கையின் அழகை தானே பார்த்து ரசிக்க ஆசைப்பட்டது.

ஆனால் தௌசி மயிலாள் இரைத் தேட வெகு தூரம் போக முடியாது. சில குறும்புக்காரப் பறவைகள் அதனை கேலி செய்தன. அந்த பறவைகள் இந்த மயிலை தனியாக விட்டு இரைத் தேடச் சென்றன.

தௌசி மயில் தனக்கு தானே யோசித்துக் கொண்டிருந்தது, நான் பறவை என்றால், என்னால் பறக்க முடிய வேண்டும். எனக்கு ஏன் மற்ற பறவைகள் போல இறக்கைகள் இல்லை?

தௌசி மயில் ஆழ்ந்த சிந்தனையில்  இருந்தது மற்ற பறவைகளிடம் இருந்து இறக்கைகளை சேகரிக்க முடிவு செய்தது.

மயில் ஆந்தையைப் பின் தொடர்ந்து மெதுவாக சென்றது.

மயில் ஆந்தையிடம் இருந்து சில இறக்கைகளை  அதற்கு தெரியாமல் எடுத்து வந்தது.

அந்த இறக்கைகள் அழகாகவும், நீளமாகவும், அடர்த்தியான நிறத்திலும் இருந்தது.

அதை போல கிளியிடம் இருந்தும் இறக்கைகளை எடுத்து வந்தது.

தௌசி மயிலுக்கு அழகிய பச்சை மற்றும் மஞ்சள் இறக்கைகள் கிடைத்தது.

மயில் மற்ற நிறைய பறவைகளிடம் இருந்து இறக்கைகளைத் திருடியது.

மயில் ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த வாத்துக்களிடம் இருந்து இறக்கைகளைப் பறித்து வந்தது. அந்த இறக்கைகள் நேர்த்தியாகவும் வெள்ளையாகவும் இருந்தது.

தௌசி இறக்கை - சேமிப்பை இரகசியம் ஆக வைத்தது.

தௌசி மயில்  சாப்பிட்டு கொண்டிருந்த இரண்டு கழுகளிடம் இருந்து கூட இறக்கைகளை திருடியது!

இப்பொழுது மயில் நிறைய அழகிய இறக்கைகளை சேகரித்தது. புத்திசாலித்தனம் ஆக எல்லா இறக்கைகளையும் சேர்த்து நெய்தது.

மயில் கவனமாக இறக்கைகளை வாலுடன் இணைத்தது. தனது வாலை நீட்டிய போது இறக்கைகள் விசிறியைப் போல விரிந்தது.

அது அழகாக இருந்தது. அந்த வெவ்வேறு வண்ணங்கள் மயிலைப் பார்க்க மேலும் வசீகரமாக்கியது.

இப்பொழுது தௌசி மயில் கிராமத்தில் இருந்த மிக அழகிய பறவையாகக் காட்சி அளித்தது.

வேறு எந்த பறவையும் மயிலைப் போல அவ்வளவு அழகான இறக்கைகளைக் கொண்டில்லை.

தௌசி மயில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த காட்டில் இருந்த மிக அழகியப் பறவையாக தெரிந்ததால், இதற்கு மேல் பறக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

மற்ற பறவைகள் தௌசியை இப்பொழுது கிண்டல் கேலி செய்வதில்லை. அந்த பறவைகள் மயிலின் அழகைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து இருந்தன!