“அம்மா, எனக்கு பசிக்குது” என்றான் ப்ரணவ்.
“அப்போ சீக்கிரம் போ” என்றார் அம்மா. “ஏம்மா?” “உனக்கு பசிக்குது. எனக்கும் பசிக்குது. எனக்கு பின்னாடி அப்பா இருக்காரு. அவருக்கும் பசிக்குது!” “அதனால் என்ன?”
எத்தனை பேர் படிக்கட்டுகளில் பசியுடன் ஏறுகிறார்கள்?
“அதனால, சீக்கிரமா போ ப்ரணவ்! சீக்கிரமா” என்றார் அம்மா. “ஏம்மா?”“உனக்கு பசிக்குது. எனக்கு பசிக்குது. அப்பாவுக்கு பசிக்குது. பூனைக்கும் பசிக்குது!” “பூனைக்குமா?” என்று கேட்டான் ப்ரணவ்.
“மியாவ் மியாவ் மியாவ்வ்! ஒரு பெரிய சிவப்பு கூஜாவில் கொஞ்சம் பால் கிடைக்குமா? நான் களுக் கிளக் க்ளுக்னு குடிக்கணும்!” என்று கத்தியது பூனை.
ப்ரணவுக்கும் பூனைக்கும்
நடுவே எத்தனை பேர் உள்ளனர்?
“சீக்கிரமா போ ப்ரணவ்! சீக்கிரமா” என்றார் அம்மா. “ஏம்மா?” “உனக்கு பசிக்குது. எனக்கு பசிக்குது. அப்பாவுக்கு பசிக்குது. பூனைக்கு பசிக்குது. நாய்க்கும் பசிக்குது!” “நாய்க்குமா?” என்று கேட்டான் ப்ரணவ்.
“லொள் லொள் லொள்! எனக்குப் பசி தாங்க முடியவில்லை! ஒரு நல்ல நீலநிறத் தட்டில் பிரெட் கெடைக்குமா?” என்று நாய் குரைத்தது.
கீழ்ப் படிக்கட்டில் இருப்பது யார்?
மேல் படிக்கட்டில் இருப்பது யார்?
“சீக்கிரமா போ ப்ரணவ்! சீக்கிரமா” என்றார் அம்மா. “ஏம்மா?” “உனக்கு பசிக்குது. எனக்கு பசிக்குது. அப்பாவுக்கு பசிக்குது. பூனைக்கு பசிக்குது. நாய்க்கு பசிக்குது. பசு மாட்டுக்கும் பசிக்குது!” “பசு மாட்டுக்குமா!” என்று கேட்டான் ப்ரணவ்.“எனக்கு பறக்கும் பட்டமும் வேணாம். மஞ்சள் பலூனும் வேணாம். ஒரு கிண்ணத்தில் வைக்கோலும், அதை சாப்பிட ஒரு பெரிய கரண்டியும் போதும்!” என்று கத்தியது பசு.
அப்பாவுக்குப் பின்னால் எத்தனை வீட்டு விலங்குகள் உள்ளன?
“சீக்கிரமா போ ப்ரணவ்! சீக்கிரமா” என்றார் அம்மா. “ஏம்மா?” “உனக்கு பசிக்குது. எனக்கு பசிக்குது. அப்பாவுக்கு பசிக்குது. பூனைக்கு பசிக்குது. நாய்க்கு பசிக்குது. பசு மாட்டுக்கு பசிக்குது. நம்ம எல்லாருக்கும் பின்னாடி யார் நிக்கிறாங்க தெரியுமா?”
அனைவருக்கும் பின்னால் இருப்பது யார் என நினைக்கிறீர்கள்?
“வரிவரியா கோடுகளோட ஒரு புலி! உறுமிகிட்டும் சீறிகிட்டும் இருக்கு! செமப் பசியோட இருக்கு!”
“புலியா?” என்று பயத்துடன் கேட்டான் ப்ரணவ்.
படிகளில் ஏறி, கதவைத் திறந்து, அனைவரும் வீட்டுக்குள் ஓடினர். பசித்திருக்கும் ப்ரணவும், அம்மாவும் அப்பாவும், பூனையும் நாயும், பசுவும், இவர்களோடு...
வீட்டுக்குள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
வீட்டுக்கு வெளியே எத்தனை பேர் இருக்கிறார்கள்?
தடார்!
“எனக்கு பசிக்குது!” என்று ப்ரணவ் சன்னமான குரலில் சொன்னான்.