ஆயா சந்தையிலிருந்து நிறைய பழங்கள் வாங்கிவந்தார்
அந்த பழங்கள் எல்லாம் பார்ப்பதற்கு சுவையாக இருந்தது.
என் அண்ணன் விசு பேராசைபட்டு எல்லாப் பழங்களையும் யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுவிட்டான்.
யார் எல்லாப் பழங்களையும் சாப்பிட்டது?
ஆயா அதை பார்த்து கோபம் வந்து கத்தினார்கள்.
நாங்கள் இதை எல்லாம் விசுதான் சாப்பிட்டுருப்பான் என்று நினைத்தோம்.
நாங்கள் இதை ஆயாவிடம் சொன்னோம்.
ஆயா அவனிடம் அதை கேட்டதும் அவன் ஒத்துக் கொண்டான்.
திடீர் என்று விசுவிற்கு உடம்பு சரியில்லை.
அவன் கழிவறைக்கு ஓடினான்.
விசு வயிற்றை பிடித்தபடி வெளியே வந்தான்.
விசுவிற்கு நடந்ததைப் பார்த்து நீங்கள் எல்லாம் என்ன பாடம் கத்துக்கிட்டீங்க? என்று ஆயா கேட்டார்கள்.