pesum puthagam

பேசும் புத்தகம்

அக்கா வந்தாள், புத்தகம் தந்தாள். குப்பன், சுப்பன், கும்மி மற்றும் பொம்மியின் வாழ்க்கை மாறியது.

- Oliver. B,Jayalekshmy Subramaniom

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குப்பன், சுப்பன், கும்மி மற்றும் பொம்மி.

நாள்தோறும் தேவையான குப்பைகளை சேர்ப்பார்கள்.

படிப்பதும் இல்ல, விளையாடுவதும் இல்லை.

தெருக்களில் சுற்றி திரிவார்கள்.

அவ்வழியே செல்லும் ஒரு அக்கா.

தினமும், சிறுவர்களை பார்த்து கடந்து செல்வார்கள்.

திடீரென ஒரு நாள், அக்கா அவர்களிடம் வந்து,

பெட்டியிலிருந்து புத்தகங்களை எடுத்தாள்.

இங்கும்-அங்குமாக புத்தகங்களை வைத்தாள்.

பின்பு, ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

பொம்மி, அக்காவின் புத்தகத்தை எட்டிப் பார்த்தாள்.

ஆஹா ! எவ்வளவோ அழகான புத்தகம் !

குப்பன், சுப்பன் மற்றும் கும்மி ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்து,

பேசத் தொடங்கினார்கள்.

நால்வரும், புத்தகங்களுடன் பேசி,

படித்து விளையாடி மகிழ்ந்தனர்.