இது நடாபோ. இவளுக்கு ஆறு சகோதரர்கள் இருக்கிறார்கள்.
அவள் பெற்றோர் அவளுக்கு ஒரு சின்னப் பானையை கொடுக்கின்றனர்.
அவள் அதை நேசிக்கிறாள்.
ஒருநாள் அவளுடைய சகோதரர்கள் பானையை உடைக்கின்றனர்.
நடாபோவால் அவளது பானையை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவள் அழுது கொண்டே இருக்கிறாள்.
நடாபோ ஓடிப் போகிறாள். அவள் ஒரு பெரிய மரத்தில் ஏறுகிறாள்.
அவள் பெற்றோர் அவளைக் காண்கின்றனர். "தயவுசெய்து கீழே வா," அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
அவளுடைய சகோதரர்கள் பாடுகின்றனர், "தயவுசெய்து கீழே வா".
நடாபோ அவர்கள் பாட்டை கேலி செய்கிறாள்.
பிறகு நடாபோவின் தோழி வருகிறாள். "தயவுசெய்து கீழே வா," அவள் பாடுகிறாள்.
நடாபோவின் தோழி அவள் கீழே வரும் வரை பாடுகிறாள்.
தோழிகள் சேர்ந்து வீட்டுக்கு நடக்கின்றனர்.
நடாபோ வீட்டுக்கு வந்ததை அனைவரும் கொண்டாடுகின்றனர். நடாபோவிற்கு புதுப் பானை கிடைக்கிறது!