puthisaali sona

புத்திசாலி சோனா

சோனாவின் அப்பா அவளுக்கு ஒரு அழகான பொம்மை செய்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து எப்படி ஒரு அழகான பொம்மை செய்தார்கள் என்று பாருங்கள்.

- Rajarajan Radhakrishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அப்பா சோனாவிற்கு மரத்தால் ஒரு மாட்டு வண்டி செய்ய ஆரம்பித்தார்.

“நானும் செய்யறேன் அப்பா !” என்று சோனா சொன்னாள்.

அப்பா ரம்பம் கொண்டு மரத்தை அறுக்க ஆரம்பித்தார்.

“நானும் செய்யறேன் அப்பா” என்று சோனா கையை நீட்டினாள்.

“சரி, சரி, ஆனா முதலில் கவனமா இருக்கணும்” என்று அப்பா கூறினார்.

வண்டியின் சக்கரங்களை மாட்ட ஆரம்பித்தார் அப்பா.

“நான் ஆணி அடிக்கிறேன் அப்பா” என்று சோனா சுத்தியலை எடுத்தாள்.

“சரி, ஆனால் கவனமா இருக்கணும்” என்றார்.

அப்பா கயிறு மாட்ட ஆரம்பித்தார்.

“ அடடே, பென்சிலும், நூல்கண்டும் எங்கே?” என்று தேட ஆரம்பித்தார்.

சோனா சிரித்தபடி “ நான் கண்டு பிடிக்கட்டுமா? “ என்று கேட்டாள்.

அப்பாவின் ஒரு காதின் மேலே இருந்து பென்சிலையும், மற்றொரு காதின் மேலே இருந்து நூல்கண்டையும் எடுத்தாள்.

“ நான் உங்களை ரொம்ப கவனமா தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்” என்று சிரிப்புடன் கூறினாள்.

“ நிச்சயமா சோனா! எனக்கு இன்று நிறைய உதவிகள் செய்தாய்!” என்று அன்புடன் கூறினார்.