புவி
முதல் முறையாக பூங்காவிற்கு போகிறாள்
"அம்மா, அது என்ன ?"
"அது சறுக்கு மரம்", அம்மா சொன்னார்
"அதில் ஏறட்டுமா?" புவி கேட்டாள்
"சரி !!" அம்மா சொன்னார்
"ஹய்யா!!"
"இங்கே பாருங்க அம்மா , நான் குரங்கு போல தாவுகிறேன் "
"பத்து முறை சுற்றிட்டேனே!!" புவி சொன்னாள்.
"உங்களுக்கு எண்ணத் தெரியுதே !! புத்திசாலி புவி !! " பெருமையாய் சொன்னாள் அம்மா
"சேர்ந்து விளையாடலாமா?" புவி கேட்டாள்.
"சரி! " பையன் சொன்னான்.
"என் பெயர் புவி "
"என் பெயர் அன்பு "
மணல் பெட்டியை பார்த்தாள் புவி.
"வாங்க!! மணல் கோட்டை கட்டலாம்!! " புவி கூப்பிட்டாள்.
"உங்கள் கோட்டையை திருவும் பார்க்கட்டும் " அம்மா புகைப்படம் எடுத்தாள் .
"நேரமாச்சு புவி .வீட்டிற்கு போகலாம் " அம்மா சொன்னாள் .
"போய் வருகிறேன் அன்பு !!"
"போய் வா புவி !! மீண்டும் சந்திக்கலாம் "
"பூங்காவிற்கு அழைத்து வந்ததிற்கு நன்றி!!" அம்மாவை கட்டி அணைத்தாள் புவி.