ராஜாப் பூங்கா
Sudha Thilak
அங்கே செல்வது தடை செய்யப் பட்டிருந்தது. அங்கு இரவில் சென்று, கல்லறையின் தலைக்கல்லில் ஓர் ஆணியை அறைந்து வருவதென்றால்? ஒன்று கோபி முட்டாளாய் இருக்க வேண்டும் அல்லது தான் தைரியசாலி எனப் பீற்றிக் கொள்ள முயற்சித்திருக்க வேண்டும். இல்லை என்றால் ராகவனின் சவாலை ஏன் ஏற்றுக் கொண்டான்? பௌர்ணமி இரவில், அந்தப் பேய்ப் பிடித்த சமாதிக்குள் கோபி நுழைந்தானா?