arrow_back

ராணி மங்கம்மாள்

ராணி மங்கம்மாள்

நா. பார்த்தசாரதி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள். அந்த மங்கம்மாவை நாயகியாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணி வரலாற்று நூல்கள்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும், செய்திகளையும் ஆராய்ந்ததன் விளைவே இந்தப் புத்தகம்.