ஏய் ! மேகமே எங்கே போகிறாய்? என் வயலுக்கு கொஞ்சம் மழையைத் தாருங்கள் என்றார் விவசாயி ஒருவர். அந்த மேகம் புன்னகையோடு அவரைக் கடந்து சென்றது.
அடுத்ததாக ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றது.அந்த தோட்டத்தில் உள்ள
பூச்செடிகள் மழையைத் தாருங்கள் என்றது 'மீண்டும் ஒரு சிறு புன்னகையோடு கடந்து சென்றது.
அடுத்ததாக ஒரு குட்டையின் அருகே சென்றது. முழுமையாக வற்றக்கூடிய நிலையில் தண்ணீர் இருந்தது. அங்கிருந்த சிறுபிள்ளைகளும் மழையைத்தா? மேகமே என்றார்கள்.
கொஞ்ச தூரம் கடக்கையில் ஒரு சிறுவன் கையில் கப்பலோடு காத்திருந்தான்.
மேகமே ! மழையைத்தாயேன் என்றான்.
அந்த மேகத்தின் புன்னகைக் குறையாமல் மலைகளை அமைதியாக கடந்தது.
ஏன் இந்த மேகம் இத்தனை பொறுமைக்கொள்ளுகிறது.
ஆஹாஹா ! இப்பொழுதுதான் மனமுருகி மழையைத்தர மனமிரங்கியது.
அதே புன்னகையோடு மழைப்பொழிகிறது. அனைவரின் மகிழ்ச்சியையும் பார்க்கலாமா!
ப்பாப்பா ! விவசாயி விளைநிலத்திலே இறங்கி மழையின் வாசனையை
நுகர்ந்து மகிழ்ந்தார். பயிர்களைத் தொட்டும் மகிழ்ந்தார்.
குட்டியில் தண்ணீர் கம்மியாக இருக்கிறதே என மழையைக்கேட்ட சிறுவர்கள்
மத்தியில் சிரித்து நகர்ந்த மேகம் எதைச் சொல்லவருகிறது.
நான் மழையைக் கொடுக்கிறேன் என்றதும் ,சிறுவர்கள் மழையில் விளையாட ஆரம்பித்தனர்,ஹெஹூஹாய் என கத்திக்கொண்டே விளையாடினர்.
அங்கிருக்கும் மயில் ஒன்று தன்னுடைய நன்றியைத் தெரிவித்தது. மேகமே மிக்க நன்றி மழையினைத் தந்ததற்கு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளோம்.