ராஜாவும் மணியும் நல்ல நன்பர்கள். ராஜா மிகவும் புத்திசாலி ஆனால் மணி சிறிது வெகுளித்தனம் வாய்ந்தவன் எப்பொழுதும் ராஜா கூறுவதை கேட்க மாட்டான்
இருவரும் ஒருநாள் சாலை ஓரத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர் அப்பொழுது வழியில் இருந்த மரத்தில் பழங்கள் இருந்தன அதை கண்டு மணி பறித்து சாப்பிடலாம் என்று எண்ணினான்.
அதற்கு ராஜா மணியிடம் அதை சாப்பிட கூடாது வழியில் சென்றவர் எவரும் பறிக்கவில்லை எனவே அது விஷப் பழங்கள் நீயும் பறிக்காதே என்று கூறினான்.
மணி ராஜா கூறியதைக் கேட்காமல் மரத்தில் உள்ள பழங்களை பறித்து சாப்பிட்டான்
அந்த பழத்தை சாப்பிட்டு மணி சாலையில் மயங்கி விழுந்தான். வழியில் சென்றவர் உதவி செய்ய ராஜா அவனை மருத்துவமனையில் சேர்த்தான்
தன் தவறை உணர்ந்த மணி ராஜாவிடம் இனி இதுபோல் தவறு செய்ய மாட்டேன் எப்பொழுதும் நீ சொல்வதை கேட்பேன் என்று கூறினான்