rama nagarathirku selgiraal

ரமா நகரத்திற்குச் செல்கிறாள்

"ரமா நகரத்திற்குச் செல்கிறாள்" கதையில் ஒரு இளஞ்சிறுமி தன் கிராமத்தை முதல்முறை விட்டு நகரத்தைச் சுற்றி பார்க்க தன் தந்தையுடன் செல்கிறாள். அவள் பல்வேறு வகையான போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகனங்கள் பற்றி அறிந்துக் கொள்கிறாள்.

- Tamil Montessori

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு கிராமத்தில் ரமா என்றொரு சிறுமி இருந்தாள்.

ஒரு நாள் அவளது தந்தை வேலைக்காக அருகில் உள்ள நகரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அவள் இதற்கு முன்பு தனது கிராமத்தை விட்டு வெளியே சென்றதில்லை. அவள் தன் தந்தையிடம் கேட்டாள், "அப்பா, நான் உங்களுடன் வரலாமா?"

"நிச்சயமாக, ரமா! நீ வந்தால் இன்னும் களிப்பாக இருக்கும்" என்று ரமாவின் தந்தை கூறினார்.

ரமாவும் அவளது தந்தையும் பேருந்தில் ஏறி, சில மணி நேரம் கழித்து நகரத்தை அடைந்தார்கள்.

ரமா வண்டிகள் செல்வதைப் பார்த்து மகிழ்ந்தாள். அவளது தந்தை போக்குவரத்து சமிக்கையின் (டிராப்பிக் லைட்) ஒவ்வொரு விளக்கின் அர்த்தத்தை விளக்கினார். "சிவப்பு விளக்கு என்றால் நில், மஞ்சள் விளக்கு என்றால் வேகத்தைக் குறை, பச்சை விளக்கு என்றால் செல்", என்று அவர் ரமாவிடம் கூறினார்.

ரமா ஒரு நான்கு சக்கர பொறி வண்டி (ஜீப்),

இரு சக்கர உந்து வண்டி (மோட்டார் சைக்கிள்),

மற்றும் தானியங்கி மூவுருளி உந்து (ஆட்டோ) ஆகியவற்றைப் பார்த்தாள்.

அவள் பெரிய பண்டமாற்று வண்டிகளையும் (லாரி)

சிறிய மிதிவண்டிகளையும் பார்த்தாள்.

மேலும் அவள் ஒரு சிவப்பு இழுவை இயந்திரத்தையும்

(டிராக்டர்),

வெள்ளை சிற்றுந்தையும் (மினி பஸ்),

பச்சை டெம்போவையும்,

மஞ்சள் பள்ளி பேருந்தையும்,

நீல காவல்துறை கூண்டு வண்டியையும் (போலீஸ் வேன்),

கருப்பு மகிழூந்தையும் (கார்) பார்த்தாள்.

"இவை எல்லாம் யாருடைய வண்டிகள், அப்பா?" என்று ரமா கேட்டாள்.

அதற்கு அப்பா கூறினார், "நேப்பாலில் சிவப்பு உரிமத் தட்டுகளில் (லைசென்ஸ் பிளேட்)  வெள்ளை எண்கள் இருந்தால், அவை தனியார்

வண்டிகள்.

வெள்ளை உரிமத் தட்டுகளில் சிவப்பு

எண்கள் இருந்தால், அவை அரசு

வண்டிகள்.

கருப்பு உரிமத் தட்டுகளில் வெள்ளை

எண்கள் இருந்தால் அவை பொது

வாகனங்கள்.

மேலும் மஞ்சள் உரிமத் தட்டுகளில் நீல

எண்கள் இருந்தால் அவை

நிறுவனங்கள் அல்லது நகர

சபைக்குச் சொந்தமான

வாகனங்கள் ஆகும்."

அவர்கள் பல மகிழூந்துகள், பண்டாமாற்று வண்டிகள் மற்றும் பேருந்துகள் செல்வதைப் பார்த்தபின், ரமாவின் தந்தை கூறினார், "வா, நாம் ஒரு வாடகை மோட்டார் வண்டியைப் (டாக்சி) பிடித்து, நகரைச் சுற்றி வரலாம், ரமா!"

அப்பொழுது ஒரு  தீயணைப்பு வண்டிசத்தமான ஒலி எழுப்பி வந்தது. அதன் பின் ஒரு மருத்துவ அவசர வண்டி (ஆம்புலன்ஸ்) இருந்தது.

ஆம்புலன்ஸ் நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் செல்கிறது ஆம்புலன்ஸ் விரைந்து செல்வதற்கு மற்ற வாகனங்கள் வழி விடுகின்றன அல்லது நிறுத்துகின்றன. "அவர்கள் பாதுகாப்பாக சென்றடைவார்கள் என நம்புகிறேன்",  என்று ரமாவின் தந்தை ஆம்புலன்ஸ்   விரைந்து சென்ற பொழுது கூறினார்.

அடுத்த நாள், ரமாவும் அவளது தந்தையும் ஒரு கண்காட்சிக்குச் சென்றனர்.

ரமா ஒரு துடுப்பு படகை ஓட்டியும் பொம்மை ரயிலில் சவாரியும் செய்தாள்.

பிறகு ரமாவின் தந்தை அவளை விமான நிலையம் காண அழைத்துச் சென்றார்.

அவள் வானூர்திகள் (ஏரோ ப்லேன்) மற்றும் உலங்கூர்திகள் (ஹெலிகாப்டர்) புறப்படுவதைப் பார்த்தாள்!

அவர்கள் திரும்பும் வழியில், நிலத்தைச் சமண் செய்யும் பொறியையும் (புல்டோஸர்) பாரந்தூக்கும் கருவியையும் (கிரேன்) சாலையில் பார்த்தாள்."புல்டோஸர்கள் சாலைகளை உருவாக்க உதவுகின்றன. கிரேன்கள் வீடுகள் மற்றும் பாலங்கள் கட்ட உதவுகின்றன" என்று ரமாவின் தந்தை கூறினார்.

அடுத்த நாள் காலையில், ரமாவும் அவளது தந்தையும் ஆள் இழுப்பு வண்டியில் (ரிக்ஷா) ஏறி, தங்களது கிராமம் செல்ல பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். ரமா ரிக்ஷாவில் சவாரி செய்வதை மகிழ்ந்தாள்.

"நான் கிராமத்திற்கு திரும்பிச் சென்றதும்,

என் நண்பர்களிடம் நான் பார்த்த

அனைத்து வாகனங்களைப் பற்றிக்

கூறுவேன்" என்று ரமா நினைத்தாள்.

ரமா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.