இவன் தான் குட்டிப்பையன் ரவி. அவனுடைய செல்ல நாய்க்குட்டி மணியும் இருந்தான்.பாட்டி அதனைக் கவனித்துக் கவனித்து சிரித்தாள்.
பிறகு ரவி படிப்பதற்காக வீட்டின் உள்ளே மைய அறைக்கு வந்து படித்தான்.
தாத்தாவும், அப்பாவும் அங்கு பேசிக்கொண்டிருந்தனர்.
ரவியின் காலில் என்ன? கொலுசு. ஆனால் அது அவனுக்கு பிடிக்கவில்லை.
அம்மாவுக்கும், அப்பாவிற்கும் அவன் அணிந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.
அம்மாவிற்கும் கொலுசு வேண்டுமென்று அப்பாவிடம் கேட்டார்கள்.
பாருங்களேன்! பாட்டியும் கொலுசு அணிந்திருக்கிறார்.
அவன் அதனைக் கழற்ற முயற்சி செய்தான் முடியவில்லை.அவனுக்கு கழுத்தில் அணியும் செயின் தான் பிடிக்கும்.
அவனை சமாதானம் செய்வதற்காக அம்மா ரவியை வெளியில் அழைத்துச்
சென்றார்.அம்மாவும் ,அப்பாவிடம் கொலுசினைப்பெற்றுவிட்டார்.
அய்யோ ! பாவம் இருவரும் மழையில் நனைந்து கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
பாவம் ரவிக்கு குளிரே வந்துவிட்டது.
சற்று நேரம் கழித்து அவன் கண்ணாடியின் முன் நின்று நடனம் ஆட ஆரம்பித்தான்.
பிறகு தாத்தாவோடு சென்று ஏதோ பேசினான். தாத்தாவே குழம்பிவிட்டார்.
வாலு பையன் ரவி.
ரவியிடம் அம்மா கொலுசு உனக்கு அழகாக இருக்கிறது.ஆனாலும் டவிக்கு முகம் சரியில்லை.