robokkalodu paesum saranya

ரோபோக்களோடு பேசும் சரண்யா

சரண்யாவின் வகுப்புக்கு ஒரு புது மாணவன் வந்திருக்கிறான். ஆனால், அவன் சரண்யாவோடு பேச மறுக்கிறான். சரண்யாவும் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டாள். சரண்யா பேசுவது அவனுக்கு ஏன் புரியவில்லை? சரண்யா அவனோடு உரையாட ஒரு வழியைக் கண்டுபிடித்தாளா, இல்லையா?

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இதுதான் ரோபு. நம்ம வகுப்புக்கு வந்திருக்கும் புது மாணவன். எல்லாரும் அவனை வரவேற்போமா!

ரோபுவை நண்பனாக்கிக் கொள்ள விரும்பினாள் சரண்யா.

வா வா!

ஆனால், அவள் பேசுவது அவனுக்குப் புரிந்தது போலத் தெரியவில்லை.

ஹாய்

ஹலோஓஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓ!

ஓய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஸ்ஸ், ஸ்ஸ்ஸ்!

ஏன் என்னோட பேச மாட்டேங்கிற?

அப்புறம், சரண்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

பாப்!

ரோபுவுக்கு நிரல் வடிவில் ஒரு செய்தியை எழுதினாள் சரண்யா.

ரோபுவின் மூளை அந்த நிரலைப் படித்ததும், அவன் சரண்யாவுக்கு ஒருவழியாக பதிலளித்துவிட்டான்.

Hello

ரோபோக்களுடன் பேசுவது எப்படி?

இயந்திர மனிதர்கள் என்னும் ரோபோக்களின் மூளை ஒரு கணினியாகும். கணினிகளோடு பேசவும் அவற்றுக்குப் பணிகள் இடவும், நமக்கு அவற்றின் மொழியில் பேசத் தெரிய வேண்டும்.

கணினிகளுக்குப் புரியும், கணினி நிரல் அடிப்படையிலான மொழிகளை நிரலாக்க மொழிகள்(Programming Languages) என்று சொல்வோம். இயந்திரங்களோடு தொடர்புகொள்ள நிரல்கள் எழுதுபவரை நிரலாளர் என்போம். கணினிகளோடு பேசவும் அவற்றுக்கு வேலை சொல்லவும் பல நிரலாக்க மொழிகள் இருக்கின்றன. சி, சி++, ஜாவா என்பன அவற்றுள் சில.

உங்களுக்கும் இயந்திர மனிதர்களுடன் பேச ஆசையாக இருக்கிறதா?