rombba sattum

ரொம்ப சத்தம்

சிருங்கேரி சீனிவாசன் நீண்ட தலைமுடியுள்ள அன்பான விவசாயி. அவர் ஒரு புதிய நெடுஞ்சாலை வழியாக தன் பசுக்களை சந்தைக்கு அழைத்துச் செல்லவேண்டியிருந்தது. சாலையில் சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனைச் சமாளிக்க அவர் புத்திசாலித்தனமான ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார். எப்பொழுதும் போல!

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சில்வண்டின் கிர்க்... கிர்க்... சத்தமோ அதிக இரைச்சலாகக் கேட்டது. அலறும் ஆந்தைகளை விரட்ட விரும்பினார் சிருங்கேரி சீனிவாசன். அதிகாலை 4 மணிக்கு கத்திய குயில்கள் மீதும் கோபம் வந்தது.

பசுக்கள் கத்துவதை நிறுத்திவிட்டன. சில்வண்டுகளும் ஆந்தைகளும் வேறு கிராமத்துக்குச் சென்றுவிட்டன. புலிகூட உறுமுவதை நிறுத்திவிட்டது.