சஹானா படிக்க முயல்கிறாள். ஏன் பூங்கா ஒரே இரைச்சலாக இருக்கிறது?
டர்ர்ர்ர்ர்
தட்
டம் டம்
டட்டட்டட்டட்
சஹானாவுக்கு போர் அடிக்கிறது. ஏன் அவள் வீடு ஒரே அமைதியாக இருக்கிறது?
தொம்
டொக்
டொக்
டொக்
சஹானாவுக்கு சப்தங்கள் ரொம்பப் பிடிக்கும். இசை என்றால் ரொம்பப் பிடிக்கும். அவள் எல்லாவற்றையும் கையால் அடிக்கத் தொடங்குகிறாள்.
தொம்
டிங்
டமால்
டாங்
ஆவ்
ப்லாங்
டாங்
ப்லிங்
கரண்டியால் கையில் அடித்துக் கொள்கிறாள்.
டிங்
சஹானா கண்ணாடிக் கோப்பைகளை ஒவ்வொன்றாகத் தட்டுகிறாள். எத்தனை எத்தனை சப்தங்கள்!
பிங்
டிங்
பிங்
டிங்
டிங்ங்ங்
சஹானா மெதுவாகத் தட்டுகிறாள்.
டொங்ங்ங்ங்
சஹானா கண்ணாடிக் கோப்பைகளை பலமாக அடிக்கிறாள்.
சஹானா தனது கரண்டியை கண்ணாடிக் கோப்பைகளின் மீது வரிசையாக நழுவ விடுகிறாள்.
அவள் தண்ணீர் நிறைய இருக்கும் கண்ணாடிக் கோப்பையின் மீது தட்டுகிறாள். அது டுட் டுட் டுட் என்கிறது.
அவள் தண்ணீரில்லாமல் காலியாக இருக்கும் கண்ணாடிக்கோப்பையின் மீது தட்டுகிறாள். அது க்ர்ரின் க்ர்ரின் க்ர்ரின்ன்ன்ன்ங்ங் என்கிறது!
“நான் இசையமைக்கிறேன்!” என்கிறாள் சஹானா.
ஒலி என்பது உங்கள் காதை வந்தடையும் காற்றில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத அலைகள்தான். ஒலி பெரிதாகவோ சத்தமானதாகவோ இருந்தால் அலை உயர்வாக இருக்கும். சிறிய ஒலியாக இருந்தால் அலை தாழ்வானதாக இருக்கும்.
தாழ
உயர