கார் மீது சக்கரம் மிகவும் கோபமாக இருந்தது.
கார் பெரும்பாலும் மிகவும் சூடான சாலைகளில் சக்கரத்தை ஓட்டியது.
கூர்மையான கற்கள் மற்றும் சேற்று சாலைகள் வழியாக கார் சக்கரத்தை ஓட்டியது.
சக்கரம், "நான் ஏன் காரை விட்டு செல்லக்கூடாது?" என்று நினைத்தது.
எனவே, அது ஒரு புதிய வாகனத்தைத் தேடச் சென்றது.
விரைவில், அது லாரியை கண்டுபிடித்தது.
"நான் உனது சக்கரமாக இருக்க முடியுமா?" அன்று அதனிடம் கேட்டது.
"நிச்சயமாக, நிச்சயமாக," லாரி பதிலளித்தது.
லாரியுடன் சென்றபோது, சக்கரம் கத்தியது, “ஓ, நீ மிகவும் கனமாக இருக்கிறாய், நான் நசுக்கப்பட்டு விடுவேன்! ”
சக்கரம் லாரியை விட்டுவிட்டு மற்றொரு வாகனத்தை தேடிச்சென்றது.
அடுத்து, அது ஒரு டுக் டுக்கைக்
கண்டுபிடித்தது. "நான் உனது
சக்கரமாக இருக்கலாமா?"
என்று கேட்டது.
"ஆம் கண்டிப்பாக!"
டுக் டுக் பதிலளித்தது
டுக் டுக் செல்லும்போது, “இறங்குங்கள் அல்லது நீங்கள் என்னைத் குப்புற தள்ளிவிடுவீர்கள்” என்று கத்தியது. மற்றொரு வாகனத்தைக் கண்டுபிடிக்க சக்கரம் சென்றது.
சக்கரம் சைக்கிளிடம் அதனை சேரலாமா என்று கேட்டது. “இல்லை, நீயும் நானும் ஒரே அளவு இல்லை” என்று சைக்கிள் பதிலளித்தது.
அடுத்து, சக்கரம் குதிரை வண்டியைக் கேட்டது. ஆனால் அதுவும் செயல்படவில்லை.
சோர்வாகவும் சோகமாகவும் சக்கரம் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தது.
ஒரு சிறுவன் வந்து சக்கரத்திடம், “நீ என் நண்பனாக இருப்பாயா?” என்று கேட்டான். "ஆம்!" என்று சக்கரம் கூறியது.
இப்போது அவர்கள் ஒன்றாக ஊஞ்சல் ஆடுகிறார்கள்.
அவர்கள் ஒன்றாக விளையாடுகிறார்கள்.
அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்கிறார்கள்.