arrow_back

சமுதாய வீதி

சமுதாய வீதி

நா. பார்த்தசாரதி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

பட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வுமாறித் தானாக வேண்டியிருந்தது . கந்தசாமிவாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடகசபாவில் பாடல்களும், வசனமும் எழுதிச் சமயா சமயங்களில் - மேடையேறி நடித்தும் வந்த காலத்தில் அவனுடைய வாழ்க்கையில் இவ்வளவு வேகமுமில்லை, பிரகாசமுமில்லை. மதுரையிலும் சென்னையிலுப் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் இவ்வளவு வேறுபடக் காரணம் என்னவென்று சிந்திப்பதற்கு வேண்டுமானால் இடம் இருக்கலாம். வெளிச்சம் அதிகமாக இருக்கிற இடத்தில் சிறிய வாழ்வு கூடச் சிறிதாய் மங்கிப் போகலாம்.