முக்கோணக்
கூரையின் மேல்
பூனைக்குட்டி
செவ்வக
ஜன்னலில்
பூனைக்குட்டி
தலை மேலே கனசதுர ஐஸ்கட்டியோடு நடுங்கும் பூனைக்குட்டி!
மி-யா-வ்வ்வ்வ்...
பர்ர்ர்... பர்ர்ர்
சாய்சதுரக்
காற்றாடியுடன்
பூனைக்குட்டி
சதுரப் பலகையில்
பூனைக்குட்டி
மி-யா-வ்வ்வ்வ்...
பறக்....பறக்...
மகிழ்ச்சியான பூனைக்குட்டிக்கு ஒரு உருளை மரத்துண்டு
வட்டப் பாயின்
மீது தூங்கும்
பூனைக்குட்டி
நீள்வட்டக்
கண்ணாடியில்
பூனைக்குட்டி
மி-யா-வ்வ்வ்வ்...
ஸ்ருப்... ஸ்ருப்...
வெயிலில் வந்த
பூனைக்குட்டிக்கு
ஒரு கூம்பு ஐஸ்கிரீம்
அறுகோணத்
தேன்கூட்டருகில்
பூனைக்குட்டி
பிறை நிலா மீது
பூனைக்குட்டி
பசியோடு வந்த
பூனைக்குட்டிக்கு
ஒரு பட்டைக்கூம்பு சமோசா
மி-யா-வ்வ்வ்வ்...
கறுக்... முறுக்...
1. முக்கோணம்
2. சதுரம்
3. செவ்வகம்
4. சாய்வட்டம்
5. வட்டம்
1. கனசதுரம்
2. உருளை
3. கூம்பு
4. பட்டைக்கூம்பு
5. கோளம்
இந்தப் படத்தைப் பார்த்து, இதிலுள்ள வடிவங்களையும்
பூனைகளையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!