அடடே! என்ன அழகான ஸ்கூட்டர் மஞ்சள் வண்ண நிறத்தில் சாலைகளை
கடந்து செல்லும்.இது தான் ருக்குமணி
ருக்குமணிக்கு இரண்டு நண்பர்கள்.ஒன்று சிவப்பு வண்ண டிராக்டர்.மற்றொன்று நீல வண்ண டிரக்.
மூவரும் வெளியில் உல்லாச பயணத்தை மேற்கொண்டனர்.
சோகமாக இருந்த டிராக்டரை வா வெளியில் செல்லலாம் என அழைத்தது.
பிறகு சாலைகளில் மூவரும் ஒற்றுமையாக முகமலர்ச்சியுடன் சென்றனர்.
அச்சச்சோ!திடீரென ருக்குமணி விழுந்து விட்டதே! என்னவாயிற்று ருக்கு உனக்கு? எழுந்திரு நீல வண்ண டிரக் கூறியது.
ருக்குவை கைப்பிடித்து தூக்கிய டிரக் அதுவே கொஞ்ச தூரம் அழைத்துச் சென்றது.ருக்குவின் பயம் போனது.பிறகு அதுவே நகர்ந்தது.இருவரும் வீட்டிற்குப் புறப்பட்டனர்.
டிரக் மகிழ்ச்சியாக வயலுக்கு சென்று, நிலங்களை உழுதுவிட்டு வீட்டிற்கு வந்தது.
வீட்டிற்கு வந்தவுடன் அனைவரும் ஒருவருக்குள் ஒருவர் மகிழ்ச்சியாக பேசி மகிழ்ந்தனர்.பிறகு அங்கிருந்து விடைப்பெற்றது ருக்கு.
ருக்குமணி மீண்டும் சாலைகளில் உல்லாசமாய் நகர ஆரம்பித்தது.அதனுடைய முகத்தில் நண்பர்களோடு சிலமணித்துளிகள் இருந்த மகிழ்ச்சி தெரிந்தது.