நாம் நடக்கும் பாதை நீளமாக இருந்தால், நாம் பாடிக்கொண்டே சேர்ந்து நடக்கலாம்.
நான் உன்னுடன் இருக்கிறேன். நீ என்னுடன் இருக்கிறாய். நாம் குடும்பத்தோடு பயணம் செய்தால் சந்தோஷமாக இருக்கும்.
கோழி அதன் சிறகு அடியில் தன் குஞ்சுகளை சூடாக வைப்பதைப் போல, நான் உன்னை வைத்துக்கொள்கிறேன்.
வானத்தில் இருந்து மழை விழுந்தால், உன் முகம் ஈரமாகாமல், அந்த நல்ல தொப்பி போல் உன்னை
காத்துக்
கொள்கிறேன்.
புயல் மழை மேகத்திற்கு கோபம் வந்து உறுமி புலம்பினால், தைரியமாக இரு. எதற்கு அழவேண்டும்?
நீ தனியாக இல்லையே.
நாம் சேர்ந்து நடக்கிறோம். அதனால் நாம் சலித்துப் போவதில்லை. மேலே பார்! சுற்றும் முற்றும் பார்!
நீ வேடிக்கையாக எதையும் பார்த்தால், நானும் அதை பார்க்கவேண்டும். அதனால், உடனே என்னிடம் பகிர்ந்துகொள்!
நடந்து நடந்து தூரம் வந்ததால், உன் கால் வலித்தால், வருந்தாதே. இதோ, நாம் சிகிச்சையகம் வந்து விட்டோம்.
நாம் நம் தொண்டை, நுரையீரல், காது போன்ற உடல் உறுப்புகளை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். வளர வளர உடல் வலிமை பெற வேண்டும். அழுவதற்கு எந்த காரணமும் இல்லை.
பயமாக இருக்கிறதா? இதோ, என் கையை பிடித்துக்கொள். அவள் உன் இரத்த அழுத்தத்தை அந்த புத்திசாலி கை கட்டு மூலம் அளப்பாள்.
அவர்கள் நமக்கு தேவையான மருந்து மாத்திரைகளை குடுப்பார்கள். அவை நாம் ஆரோக்கியமாக இருக்க உதவும். இப்போ நாம் திரும்பி வீட்டிற்கு செல்லலாம்.
நீ சோர்வாக இருந்தால் பரவாயில்லை. நாம் இன்று நிறையப் பார்த்தோம். இப்போது தூங்கும் நேரம் வந்தாச்சு. நன்றாக தூங்கு. இனிய கனவுகள் வரட்டும்.