முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு சிறுமி இருந்தாள், அவள் பெயர் - செவ்வந்தி. அவள் வீட்டின் அருகில் ஒரு சிறிய காடு இருந்தது. அங்கிருந்த ஓர் ஆலமரத்தில் ஒரு பச்சைக்கிளி வாழ்ந்து வந்தது. செவ்வந்தி அந்தப் பச்சைக்கிளிக்கு அழகி என்று பெயர் வைத்தாள்.இருவரும் மணிக்கணக்காக கதைப் பேசிக் கொண்டிருப்பார்கள். இருவருக்கும் மற்றவருடன் நேரம் கழிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
செவந்தியும் அழகியும் நல்ல தோழிகளாயினர்.இருவரும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வர்.
அழகியுடன் பேசுவதால் செவ்வந்தி மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.
ஒரு நாள் அழகி எங்கோ தூரமாக பறந்து சென்று விடுகிறது.
செவ்வந்தியும் அழகியை பின் தொடர்ந்து ஓடினாள்.
ஆனால் அதற்குள் அழகி அங்கிருந்த மலையுச்சிக்கு பறந்துவிட்டது.
மலையுச்சியில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது, அழகி அதன் மறுகரைக்கு பறந்து விட்டது.செவ்வந்திக்கு நீந்தத் தெரியாததால், அவள் மேலே தொடர முடியாமல் இக்கரையிலே தேங்கி நின்று விட்டாள்.
திடீரென, அங்கு ஒரு யானை வந்தது.
செவ்வந்தி யானையிடம் தான் அழகியை தொடர்ந்து வந்த கதையைக் கூறி, அதைப் பிடிக்க, ஆற்றை கடக்க உதவுமாறு வேண்டினாள்.
யானையும் ஆற்றை கடக்க செவ்வந்திக்கு உதவியது.பின் அவர்கள் எல்லோரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.