கொக்கரக்கோ.
வணக்கம். எழுந்திரு.
நான் எழுந்துக்கலை.
எனக்குப் பெரிய வேலை ஒண்ணும் இல்லை.
நான் பல் துலக்க மாட்டேன்.
குளிக்க மாட்டேன்.
இட்லி சாப்பிட மாட்டேன்.
நான் பள்ளிக்கு போகலை.
ம்ம்ம் ...
இன்னக்கி பள்ளியிலே விலங்குப் பூங்காவுக்கு போறாங்க!
ஓ! அப்படியா!
எனக்கு இட்லி பிடிக்கும்.
எனக்கு இட்லி பிடிக்கும்.
எனக்குக் குளிக்கப் பிடிக்கும்.
பல் துலக்க ரொம்ப பிடிக்கும்.
நான் பள்ளிக்குப் போறேன்!
நான் பள்ளிக்குப் போறேன். அங்க நிறைய வேலை இருக்கு.
வழி விடுங்க. வழி விடுங்க.
அவசரம், அவசரம்!