sh simmi kaettuk kondirukkiraal

ஷ்ஷ்ஷ்.. சிம்மி கேட்டு கொண்டிருக்கிறாள்….

சிம்மிக்கு அவளுடைய தங்கை லூலுவை மிக நன்றாகத் தெரியும். கண்களை மூடிக் கொண்டாலும் லூலு என்ன செய்து கொண்டிருக்கின்றாள் என்று சரியாகச் சொல்லி விடுவாள். ‘ஒலி’யைப் பற்றி இளம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் எளிய புத்தகம் இது

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சிம்மிக்கு லூலுவை நன்றாகத் தெரியும்.

கண்ணை மூடிக் கொண்டாலும் கூட

அவளுக்கு லூலுவைத் தெரியும்.

லூலு பக்கத்தில் இருக்கிறாளா என்பது தெரியும்.

சிம்ம்மி...

காப்பாத்து!

லூலு தூரத்தில் இருக்கிறாளா                   என்பதும் தெரியும்.

லூலு எங்கே ஒளிந்திருக்கிறாள் என்பதும் தெரியும்.                                                       ஹி ஹி ஹி

லூலு பயத்தில் இருந்தாலும் தெரியும்.

அது போயிருச்சா?

இது லூலு இல்லை, வேறு யாரோ என்பதும் தெரியும்! சிம்மி கண்களை மூடிக்கொண்டிருந்தாலும் அவளுக்கு பல்லூவையும் தெரியும்

லொள்               லொள்!

நாம் ஒருவருக்கொருவர் அருகில் இருக்கும் பொழுது குரல்கள் சத்தமாகவும், நாம் விலகிச் செல்லச் செல்ல மெதுவாகவும் மாறும். நாம் சத்தமாக பேசுகிறோமா, நிசப்தமாகப் பேசுகிறோமா, சிறிய, காலியான இடத்தில் பேசுகிறோமா அல்லது போர்வைக்குள் இருந்து பேசுகிறோமா என்பதைப் பொருத்து குரலின் ஒலி மாறுபடும்.

பார்க்காமலே சிம்மிக்கு லூலுவைப் பற்றி எப்படி அவ்வளவும் தெரியும்? எங்கு இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து லூலு உள்பட எல்லோருடைய சப்தமும் வெவ்வேறு விதமாகக் கேட்கும்.