silandhi silandhi

சிலந்தி! சிலந்தி!

ஒரு சிலந்தி தன்னுடைய நேரத்தை எப்படிக் கழிக்கிறது? இந்தச் சிலந்தியோடு அதன் நள்ளிரவு நடையில் இணைந்து அதைக் கண்டறிய வாருங்கள்!

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நண்பர்களே!

என்னைப் பார்க்க முடிகிறதா?

என்னைக்

கண்டுபிடிப்பது

எளிதல்ல.

எனக்கு எட்டுக் கண்கள் உண்டு.

ஆனாலும் என்னால் தெளிவாகப் பார்க்க முடியாது.

இங்கே குதிப்பேன்.

அங்கே ஊசலாடுவேன்.

இந்த வித்தையை ஸ்பைடர்மேனுக்கும் கற்றுக்கொடுத்தேன்.

நான் சுவரின் மேல் ஊர்ந்து செல்வேன்.

பயப்பட வேண்டாம். நான் கீழே விழ மாட்டேன்.

முடிகள் நிறைந்த என் எட்டு கால்களின் நுனிகளும் எதன் மீதும் ஒட்டிக்கொள்ளும்!

நான் அதிக நேரம் தூங்குவதில்லை.

இரவில்,

நொறுக்குத் தீனியைத்

தேடிச் செல்வேன்.

நானும் காவலர்களைப் போலத்தான்!

கொசுக்கள், பூச்சிகள் மற்றும் ஈக்களை விரட்டிப் பிடிப்பேன்!  பொறுங்கள்! இன்னும் ஒரு பூச்சி இங்கே. நான் போய் வருகிறேன்.

நான் அதைப் பிடிக்கப்போகிறேன்!

சிலந்தியைப் பற்றி மேலும் சில தகவல்கள்!

மிகச்சிறிய சிலந்தி

ஒரு பென்சில் முனையின் அளவுதான் இருக்கும்.

மிகப்பெரிய சிலந்திகள்

சாப்பாட்டுத் தட்டின் அளவு பெரியதாக இருக்கும்.

அவை குகைகளில் வசிக்கின்றன.

நீங்கள் வீட்டில் எளிதாகச் செய்யக்கூடிய ஒரு செயல் இது:

ஒரு சிலந்தியைக்  கவனித்துப் பாருங்கள்-

அதைத் தொந்திரவு செய்யாமல்!

அதன் எட்டுக் கால்கள்,

ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொள்ளாமல்

எப்படி நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.