singathin virunthu

சிங்கத்தின் விருந்து

சிங்க ராஜா எல்லா மிருகங்களையும் விருந்துக்கு அழைத்தது . ஆனால் யானையை அழைக்க மறந்துவிட்டது.... யானை என்ன செய்தது என்று கதையில் பார்ப்போமா.

- Shanjsal Kowsik

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காட்டில் சிங்க ராஜா  மாபெரும் விருந்து ஏற்பாடு செய்தது.

எல்லா  மிருகங்களையும் அழைத்தது.

எலி வந்தது, கரடி வந்தது,

மற்றும் எல்லா மிருகங்களும் வந்தன ,

வயிறு நிறைய சாப்பிட்டன.

அணில் இனிமையாக பாடியது!

மயில் கூடவே ஆடியது!

யானை ஒன்று அழுது கொண்டே  வந்தது.

" என்னை சிங்க ராஜா விருந்துக்கு  அழைக்கவில்லை" என்றது.

குரங்குக்கு ஒரு யோசனை தோன்றியது.

அதை சிங்க ராஜாவிடம்  கூறியது .

குரங்கு கூறியது போல்  வயிறு நிறையும் வரை வாழைப்பழம் கொடுத்து.

சிங்கம் யானையை சமாதானம் பண்ணியது.

யானை மகிழ்ச்சியுடன் வாழைப்பழங்களை விழுங்கியது.

அனைத்து மிருகங்களும் மகிழ்ச்சியுடன் விருந்தினை கொண்டாடின.