சிங்கம், நரி ,குரங்கு மற்றும் கழுதைப்புலி ஒற்றுமையாக வசித்துவந்தன.
குரங்கும் கழுதைப்புலியும் சேர்ந்து நரிக்குத் தீங்கு செய்ய திட்டமிட்டு சிங்கத்தை தனியே சந்தித்தன.
"சிங்கம், நீங்கள் மிகவும் மரியாதைக்குரியவர் ஆனால் தாங்கள் ஏன் காலணிகள் அணிவதில்லை' என குரங்கு சிங்கத்திடம் கேட்டது.
'நீ சொல்வது சரிதான். ஆனால் எனக்கு யார் காலணிகள் செய்து தருவார் 'எனக் கேட்டது?
'நரியால் உங்களுக்கு
காலணிகள் செய்து தரமுடியும் 'எனக் கழுதைப்புலி கூறியது.
"நரியை அழையுங்கள்" எனச் சிங்கம் கூறியது.
தனக்கு காலணிகள் செய்து தருமாறு சிங்கம் நரியிடம் கூறியது.
"குரங்கு மற்றும் கழுதைப்புலி தோலில் தான் தரமான காலணிகள் செய்ய முடியும்' என நரி முணுமுணுத்தது.
'எனது காலணிகள் நன்றாக இருக்க வேண்டும்" என சிங்கம் கூறியது.
அதனால் கழுதைப்புலி யையும் குரங்கையும் கொன்று அவற்றின் தோல்களை நரியிடம் கொடுத்தது.
காலணிகள் செய்துதரவில்லை எனில் சிங்கம் தன்னையும் கொன்றுவிடும் என நரி கவலைப்பட்டது.
தோல்களை ஆற்றில் போட்டுவிட்டது.
சிங்கம் அமைதிஇழந்து "எங்கே என் காலணிகள் "எனக் கர்ஜித்தது.
"தோல்கள் மேலும் மிருதுவாகக் காத்திருக்கிறேன்" என நரி கூறியது.
மறுநாள் ஆற்றில் இருந்து வேகமாக ஓடிவந்தது.
"உங்களைப்போன்று ஒரு சிங்கம் அந்த தோல்களை காவல் காத்துக்கொண்டிருப்பதால் என்னால் எடுத்து வர முடியவில்லை என்றது".
சிங்கம் தண்ணீரில் தெரியும் தன் பிரதிபலிப்பைப்பார்த்துசண்டையிட தண்ணீரில் குதித்தது.
நரியை தனியே விட்டுவிட்டு சிங்கம் ஆற்றில் மூழ்கி இறந்தது.
சிங்கம் தண்ணீரில் தெரியும் தன் பிரதிபலிப்பைப்பார்த்துசண்டையிட தண்ணீரில் குதித்தது.
நரியை தனியே விட்டுவிட்டு சிங்கம் ஆற்றில் மூழ்கி இறந்தது.