சித்தாராவிற்கு ஒரு பொழுதுபோக்கு உண்டு.
அது, விளையாடியபடியோ, அவளுடைய பெற்றோருக்கு உதவியபடியோ, பறக்கும் மாடுகளை அல்லது தலைகீழாய்த் தொங்கும் ஆந்தைகளைப் பற்றி கனவு கண்டபடியோ என எப்படி இருந்தாலும், விரலைச் சூப்பிக்கொண்டே இருப்பதுதான்.
சித்தாரா, ஒரு வெப்பமான கோடை நாளில் தனக்குப் பிடித்த, பனிக்கட்டி நிறைந்த ஒரு வாளியை தனது வீடாக்கிக் கொண்ட ஒரு குழந்தையைப் பற்றிய புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்தாள்.
வழக்கமாக, கதைகளில் ஏதாவது ஒரு கடினமான சொல்லின் அர்த்தத்தை அறிய விரும்பும்போது, சித்தாரா தன் அப்பாவிடம் கேட்பாள்.
ஆனால் இன்று அப்பா அவளிடம் கேட்டார், “சாகசம் என்றால் என்ன அர்த்தம்?”
“உற்சாகத்தைத் தூண்டும் விதமாக எதையாவது செய்வது,” என்றாள் சித்தாரா.
“அற்புதமானது என்றால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார் அப்பா.
“மிகவும் அழகானது” என்றாள் சித்தாரா.
“நினைவுச்சின்னம் என்பதற்கு என்ன அர்த்தம்?”
“ஒரு பெரிய அமைப்பு” என்றாள் சித்தாரா.
“நன்றாகச் சொன்னாய்! இப்போது கவனமாகக் கேள்! நாம் ஒரு சாகசப்பயணம் செல்லப் போகிறோம். ஒரு அற்புதமான நினைவுச் சின்னத்தைப் பார்ப்பதற்காக அடுத்த வாரம் ரயிலில் போகிறோம். அந்த நினைவுச் சின்னம் தாஜ் மஹால்!” என்றார் அப்பா. சித்தாரா மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றதால், விரல் சூப்புவதைக்கூட மறந்துவிட்டாள். அவள் ரயிலை வரைவாள். ஆனால் அவள் இதுவரை அதில் பயணம் செய்தது இல்லை!
“ஆனால், ரயில்களில் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை” என்றார் அப்பா.
அது எப்படி, அப்படி இருக்க முடியும்? சித்தாரா அதைப் பற்றி தன் அம்மாவிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தாள்.
“அம்மா, நாம் தாஜ் மஹாலைப் பார்க்கப் போகிறோம்” என்று சொன்னாள்.“
ஆமாம், அது என்னவென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் அம்மா.
“அது ரயிலில் சென்று பார்க்கவேண்டிய அ-ற்-புதம்-ஆன ஏதோ ஒன்று” என்றாள் சித்தாரா.
“நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ராஜா இருபதாயிரம் பேரைக் கொண்டுவந்து அதைக் கட்டினார்” என்றார் அம்மா. “ஆனால், ரயில்களில் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு அனுமதியில்லையே” என்றார்.
சித்தாரா பரிதாபமாக உணர்ந்தாள்.இருபதாயிரம் பேர்! நானூறு ஆண்டுகள்! அவள் தாஜ் மஹாலைப் பார்க்க விரும்பினாள்.
சித்தாரா தூங்கிப் போனாள். தான் தனியாக இருப்பதுபோலக் கனவு கண்டாள். எல்லோரும் விடுமுறையில் பயணம் சென்றுவிட்டனர். ஆனால், சோட்டு என்ன செய்கிறான் பாருங்கள்?
சித்தாரா தூக்கத்திலிருந்து எழுந்து, “நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்!” என்று கத்திக்கொண்டு, தன் பெற்றோரிடம் ஓடினாள்.
“சோட்டுவும்தான் விரல் சூப்புகிறான்,” என்று அவர்களைப் பார்த்து உரத்த குரலில் கூறினாள்.
“அவன் மட்டும் எப்படி ரயிலில் போக முடியும்?” “இரவு உணவு தயாராகி விட்டது” என்றார் அம்மா.
“சித்தாரா, நீ சீக்கிரமாக வளர்ந்து விடுவாய்” என்றார் அப்பா. “வளர்ந்த பெரியவர்களுக்கு இரண்டு கைகளும் தேவை” என்று சொன்னார் அம்மா. “பெரியவர்களுக்கு எதற்கு இரண்டு கைகளும் தேவை?” என்று கேட்டாள் சித்தாரா.
“உன் காலணி நாடாவைக் கட்டுவதற்கு உன் இரண்டு கைகளும் தேவை” என்றார் அம்மா.
“இரண்டு கைகளையும் வைத்துத்தான் பட்டாணியோ அல்லது உருளைக்கிழங்கோ உரிக்க முடியும்” என்றார் அப்பா.
“நான் வளர்ந்துவிட்டேன்! என்னால் அதையெல்லாம் செய்யமுடியும்” என்றாள் சித்தாரா. “அப்படியென்றால், நீ வளர்ந்துவிட்டாய் என்பதை எங்களுக்குக் காட்டு” என்றார் அப்பா. “சித்தாரா! தயவுசெய்து உன் கட்டை விரலை வாயில் இருந்து எடு” என்றார் அம்மா.
“உன் இரு கைகளையும் வைத்துத்தான்…” என்று அப்பா ஆரம்பிக்கிறார். “எனக்குத் தெரியும்” என்றாள் சித்தாரா. “கிரிக்கெட் மட்டையைப் பிடித்துக்கொள்ள முடியும். என் இரு கைகளையும் வைத்துத்தான் அம்மாவுக்கு சடை பின்னிவிட முடியும். என் இரு கைகளையும் வைத்துத்தான் கயிற்றின் இருமுனைகளையும் பிடித்துக்கொண்டு குதிக்க முடியும்”.
“நூலில் பட்டாம்பூச்சி செய்ய என் இரு கைகளும் தேவை. நான் விமானம் போல பறந்து விளையாட என் இரு கைகளும் தேவை. தலைகீழாக நிற்க என் இரு கைகளும் தேவை. மேலும் என் இரு கைகளையும் வைத்துத்தான்…”