சோலைமலை இளவரசி
அமரர் கல்கி
ஒரு நல்ல எழுத்தாளன் தனது கற்பனை வானில் பல காலங்கள் சஞ்சரித்து அதனுடன் ஐக்கியம் அடைந்து கருவாய், உருவாய் ஈன்று எடுக்கும் நாவல்களே அவனது செல்லப் பிள்ளைகள். அந்த வகையில் கல்கியின் கற்பனைப் பட்டறையில் உருவான அற்புத நாவல்களுள் ஒன்று தான் சோலை மலை இளவரசி. நிஜத்துக்கும், நிழலுக்கும் ஒரு நூல் இடை அளவு தான் வித்தியாசம் என்பதை இந்நாவலில் அழகாக சுட்டிக் காட்டி உள்ளார் கல்கி. ஒரு சராசரி மனிதன் நிகழ் காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் இடையில் அடிக்கடி சென்று வரும் பயணமே இக்கதையின் கரு. பூர்வ ஜென்ம ஞாபகங்களை கருவாகக் கொண்ட எண்ணற்ற கதைகளை நாம் இக்காலத்தில் படித்து இருக்கலாம். ஆனால் அக்காலத்திலேயே அதனைக் கருவாகக் கொண்டு கதையை அமைத்த வெகு சில எழுத்தாளர்களில் கல்கியும் ஒருவர். அது மட்டும் அல்ல உண்மையான காதலர்கள் இறந்தாலும் காதல் சாவதில்லை அது ஜென்ம, ஜென்மமாய் தொடர்ந்து வரும் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம். உண்மைக் காதலர்கள் அனைவரும் அவசியம் பதிவிறக்கம் செய்து படிக்க வேண்டிய நாவல் இது.